பக்கம் எண் :

433

பண்ணோ டிவைபா டியபத் தும்வல்லார்
விண்ணோ ரவரேத் தவிரும் புவரே.      11

திருச்சிற்றம்பலம்


கமழ்வதுமான சீகாழிப் பதிக்குத் தலைவனாகிய ஞானசம்பந்தன், பண்ணோடு
பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லார் விண்ணோர்களால்
ஏத்தி விரும்பப்படுபவர் ஆவர்.

     கு-ரை: வேதியன் - வேதத்தைப்படைத்த பரசிவன். வல்லவரை
விண்ணோர் ஏத்த விரும்புவர் என்றபடி. ‘கண்ணாருங் காழியர்’ (தி.2 ப.16
பா.11) என்றது காண்க.

     கண்-மூங்கில்; ‘வேணுவனம்’. ஞானக்கண் என்றுகொண்டு.
அதையுடையார்க்கு ஆகுபெய ராக்கலுமாகும். திருஞானசம்பந்த சுவாமிகள்
பண்ணோடு பாடிய உண்மை ஈண்டும் புலனாகின்றது.

திருஞானசம்பந்தர் புராணம்

விண்ணவர் போற்றிசெய் ஆனைக்காவில்
     வெண்ணாவல் மேவிய மெய்ப்பொருளை
நண்ணி இறைஞ்சிமுன் வீழ்ந்தெழுந்து
     நாற்கோட்டு நாகம் பணிந்ததுவும்
அண்ணல் கோச்செங்கண் அரசன்செய்த
     அடிமையும் அஞ்சொற் றொடையில்வைத்துப்
பண்ணுறு செந்தமிழ் மாலைபாடிப்
     பரவிநின் றேத்தினர் பான்மையினால்.

-சேக்கிழார்.