பக்கம் எண் :

435

1721.



சிறவார் புரமூன் றெரியச் சிலையில்
உறவார் கணையுய்த் தவனே உயரும்
நறவார் பொழில்நா கேச்சுர நகருள்
அறவா எனவல் வினையா சறுமே.     2
1722.



கல்லால் நிழல்மே யவனே கரும்பின்
வில்லான் எழில்வே வவிழித் தவனே
நல்லார் தொழுநா கேச்சுர நகரில்
செல்வா எனவல் வினைதேய்ந் தறுமே. 3
1723.

நகுவான் மதியோ டரவும் புனலும்
தகுவார் சடையின் முடியாய் தளவம்


     2. பொ-ரை: சிறவாதவராகிய அசுரர்களின் முப்புரங்கள் எரியுமாறு
வில்லிற் பொருந்திய நீண்ட கணையைச் செலுத்தியவனே, உயர்ந்த தேன்
பொருந்திய மலர்ச்சோலைகள் சூழ்ந்த திருநாகேச்சுரக் கோயிலில்
விளங்கும் அறவடிவினனே! என்று கூறி ஏத்த, வலிய வினைக்குற்றங்கள்
அழிந்து கெடும்.

     கு-ரை: சிறவார் - சிறக்காதவர் (திரிபுரத்தசுரர்) சிலையில்
உற -மேருவில்லிற் பொருந்த. வார்கணை - நீண்ட அம்பு. உய்த்தவன்
-செலுத்தியவன். உயரும் பொழில், நறவு ஆர் பொழில் நறவு, கள், தேன்.
நகர் - திருக்கோயில். அறவா - தருமசொரூபி! ஆசு - குற்றம்.

     3. பொ-ரை: கல்லால மரநிழலில் எழுந்தருளியவனே, கரும்பு வில்லை
ஏந்திய மன்மதனின் அழகிய உடல் வேகுமாறு விழித்தவனே, நல்லவர்களால்
வணங்கப்பெறும் நாகேச்சுரத்திருக்கோயிலில் விளங்கும் செல்வனே என்று
கூறி ஏத்த வலிய வினைகள் தேய்ந்து கெடும்.

     கு-ரை: கல் ஆல் நிழல் மேயவன் - கல்லாலின் நிழலில்
வீற்றிருந்தவன். கரும்பின் வில்லான் - கரும்பை வில்லாகவுடைய மன்மதன்.
எழில் - அழகு. ஆகுபெயராய் உடம்பைக் குறித்தது. விழித்தவன் - தீவிழி
திறந்து எரித்தவன். நல்லார் - நன்னெறியாகிய சிவஞானத்தை உடையார்,
நற்பண்புடையாருமாம். செல்வா -சென்றடையாத திருவுடையானே.

     4. பொ-ரை: விளங்குகின்ற வானத்தில் ஊரும் திங்கள், பாம்பு, கங்கை
ஆகியன பொருந்திய தக்க நீண்ட சடையை உடையவனே, 107