|
நகுவார்
பொழில்நா கேச்சுர நகருள்
பகவா எனவல் வினைபற் றறுமே. 4 |
1724.
|
கலைமான்
மறியுங் கனலும் மழுவும்
நிலையா கியகை யினனே நிகழும்
நலமா கியநா கேச்சுர நகருள்
தலைவா எனவல் வினை தா னறுமே. 5 |
1725.
|
குரையார்
கழலா டநடங் குலவி
வரையான் மகள்கா ணமகிழ்ந் தவனே
நரையார் விடையே றுநாகேச் சுரத்தெம்
அரைசே யெனநீங் குமருந் துயரே. 6 |
முல்லை மலர்கள் விளங்கும்
நீண்ட பொழில்கள் சூழ்ந்த
நாகேச்சுரத்திருக்கோயிலில் விளங்கும் பெருமானே என்று கூறி ஏத்த வலிய
வினைகளின் தொடக்கு அறும்.
கு-ரை:
நகு - விளங்குகின்ற. வான்மதி - விண்ணிலூரும் திங்கள்;
வெண்டிங்களுமாம். அரவு - பாம்பு. புனல் - கங்கை. தகு - தக்க. வார்
-நீண்ட. தளவம் - முல்லை. நகுவார் - பல்லைக் காட்டிச் சிரிப்பார்
(போலப்பூக்கும் பொழில்) தளவம் நகும்வார் பொழில் எனல் வெளிப்படை,
பகவா - கடவுளே; ஷாட்குண்யனே.
5.
பொ-ரை: மான்கன்று, அழல், மழு ஆகியன நிலையாக
விளங்கும்
கைகளை உடையவனே, நன்மை விளையும் தலமாகிய நாகேச்சுரக் கோயிலில்
விளங்கும் தலைவனே! என்று கூறி ஏத்த வலியவினைகள் கெடும்.
கு-ரை:
கலைமான்மறி - ஆண் மான்கன்று. கனல் - தீ. மழு
-மழுவாயுதம், நிலை - நிற்றல். நிகழும் நலம் - உலகப் பிரசித்தி பெற்ற
வினை தீர்தலாகிய நன்மை. நகர் - திருக்கோயில்.
6.
பொ-ரை: மலைமகளாகிய பார்வதி தேவி கண்டு
மகிழ, கால்களில்
ஒலிக்கின்ற வீரக்கழல்கள் ஆடநடனம் ஆடி மகிழ்பவனே, வெண்ணிறமான
விடையின்மீது ஏறி நாகேச்சுரத்துள் விளங்கும் அரசனே! என்று கூறி ஏத்த,
நீங்குதற்கு அரியவாய் வரும் துன்பங்கள் கெடும்.
|