பக்கம் எண் :

437

1726.



முடையார் தருவெண் டலைகொண் டுலகில்
கடையார் பலி கொண் டுழல்கா ரணனே
நடையார் தருநா கேச்சுர நகருள்
சடையாவென வல்வினை தானறுமே.  7
1727.



ஓயா தவரக் கனொடிந் தலற
நீயா ரருள்செய் துநிகழ்ந் தவனே
வாயா ரவழுத் துவர்நா கேச்சுரத்
தாயே யெனவல் வினைதா னறுமே.  8


     கு-ரை: குரை - ஒலி, நடம் - நிருத்தம். வரையான் - இமாசலராசன்.
நரை - வெண்மை. ஆர் - பொருந்திய. விடையேறு: (தொல்காப்பியம்,
மரபியல். சூ 37, 38,) அரைசு - மொழியிடைநின்ற ஐகாரம் போலி. அரசனே
என்று விளித்தது. நீங்குதற்கு அரிய துயரமும் நீங்கும் என்றவாறு.

     7. பொ-ரை: முடை நாற்றம் பொருந்திய வெள்ளிய தலையோட்டை
ஏந்தி உலகில் பலர் வீட்டு வாயில்களிலும் பலி கொண்டு உழலும் உலகக்
காரணனே, நாகேச்சுரக் கோயிலுள் எழுந்தருளிய சடையனே! என்று கூறி
ஏத்த, வலிய வினைகள் கெடும்.

     கு-ரை: முடை - புலால், நாற்றமுமாம். கடை - கடை வாயில்.
காரணன் - முதல்வன். நடை - ஒழுக்கம். சடையா - (ஞானமான) சடையனே.
‘நுண்சிகைஞானமாம்’.

     8. பொ-ரை: தன் வலிமையால் இடைவிடாது போர்புரியும் இராவணன்
மனம் உடைந்து அலற நீ அவனுக்கு அரிய அருளைச் செய்து மனம்
இளகுதலாகிய உன் நடை முறையைக் காட்டியவன், என்று உன்னைப் பலரும்
வாயார வாழ்த்துவர். நாகேச்சுரத்தில் எழுந்தருளிய இறைவனே! என உன்னை
நினைந்து போற்றுவார் வலிய வினைகள் கெடும்.

     கு-ரை: ஓயாத - (தான் செய்யும் குற்றத்தை உணர்தற்கு உணர்வில்)
நுணுகாத, இடைவிடாத என்றலுமாம். நீ - தேவரீர். ஆரருள் -பூரணகருணை
வாயார வழுத்துவர் - “வாயாரப்பாடுந் தொண்டர்”. தாயே - ‘தாயாய்
முலையைத் தருவானே’ (முத்திநிச்சயப்பேருரை