பதிக
வரலாறு:
சீகாழிக்குரிய
பதிகவரலாறு காண்க.
பண்: இந்தளம்
ப. தொ. எண்:
161 பதிக
எண்: 25
திருச்சிற்றம்பலம்
1731.
|
உகலி
யாழ்கட லோங்கு பாருளீர்
அகலி யாவினை யல்லல் போயறும்
இகலி யார்புர மெய்த வன்னுறை
புகலி யாம்நகர் போற்றி வாழ்மினே. 1 |
1732.
|
பண்ணி
யாள்வதோ ரேற்றர் பான்மதிக்
கண்ணி யார்கமழ் கொன்றை சேர்முடிப்
புண்ணி யன்னுறை யும்பு கலியை
நண்ணு மின்னல மான வேண்டிலே. 2 |
1.
பொ-ரை: தாவிச்செல்லும் அலைகளை உடைய
ஆழ்ந்த கடலால்
சூழப்பட்ட உலகின்கண் வாழ்பவர்களே, தன்னோடு மாறுபட்ட அசுரர்களின்
முப்புரங்களை எய்தழித்த சிவபிரான் உறையும் புகலி என்ப்பெயர் பெற்ற
சீகாழிப்பதியைப் போற்றி வழிபடுங்கள். வினைகள் பெருகாமல் ஒழியும்.
அல்லல் போகும்.
கு-ரை:
உகலி - தாவி.
(உகளிஎன்பதன்போலி) உகுதலையுடைய
எனலுமாம். ஆழ் - ஆழ்ந்த. பார் - பூமி. உளீர் - உள்ளவர்களே!. வினை
அகலியா - வினைகள் பெருகாமல் ஒழியும். அல்லல் போய் அறும்.
இகலியார் - பகைவர். புகலியாம் நகர் - சீகாழித் திருக்கோயிலை. போற்றி -
வழிபட்டு. வாழ்மின் - இன்பவாழ்க்கை எய்துங்கள்.
2.
பொ-ரை: நன்மைகள் பலவும் உங்களை அடைய வேண்டுமாயின்,
அலங்கரித்து ஊர்ந்து ஆளும் விடையை உடையவனும், பால் போன்ற
வெண்மையான பிறை மதியைக் கண்ணியாகப் புனைந்தவனும், மணம் கமழும்
கொன்றை மாலைசேர்ந்த முடியினனும் ஆகிய
|