பக்கம் எண் :

441

1733.



வீசு மின்புரை காதன் மேதகு
பாச வல்வினை தீர்த்த பண்பினன்
பூசு நீற்றினன் பூம்பு கலியைப்
பேசு மின்பெரி தின்ப மாகவே.     3
1734.



கடிகொள் கூவிளம் மத்தம் வைத்தவன்
படிகொள் பாரிடம் பேசும் பான்மையன்
பொடிகொள் மேனியன் பூம்பு கலியுள்
அடிக ளையடைந் தன்பு செய்யுமே.  4


புண்ணிய மூர்த்தியாகிய சிவபிரான் உறையும் புகலியை அடைந்து
வழிபடுங்கள்.

     கு-ரை: பண்ணி - அலங்காரம் செய்து. ஏறி ஊர்வது இங்கு
ஆள்வதாயிற்று. ஏற்றர் - எருதுடையவர். மதிக்கண்ணி - பிறையாகிய
கண்ணி. தலையிற் சூடுவதும் காம்புகளை ஒருபால் வைத்துக்
கட்டுவதுமாகிய பூங்கண்ணியாகப் பிறையைக் கொண்டவன் சிவன். நலம்
ஆன - நலங்களானவை. வேண்டில் - விரும்பினால்.

     3. பொ-ரை: இன்பம் பெரிதாக விளையவேண்டின், ஒளிவீசும்
மின்னல் போன்ற அணிபூண்ட காதினனும், பற்றுக்கள், வலிய வினைகள்
ஆகியவற்றைப் போக்கிய மேதகு பண்பினனும், திருநீறு பூசியவனும் ஆகிய
சிவபிரான் எழுந்தருளிய புகலிப்பதியை அடைந்து அவனைப்புகழ்ந்து
பேசுங்கள்.

     கு-ரை: வீசும் மின் புரை - வீசுகின்ற மின்னலை ஒத்த, பெரிது
ஆகப் பேசுமின் என்க. பெரிது இன்பம் - பேரின்பம் எனலுமாம்.

     4. பொ-ரை: மணம் கமழும் வில்வம், ஊமத்தைமலர் ஆகியவற்றை
முடிமிசைச் சூடியவனும், பெரிதான இவ் வுலகில் உள்ளோர் புகழ்ந்து
போற்றும் தன்மையாளனும், திருநீற்றுப்பொடி பூசிய மேனியனும் ஆகிய
சிவபிரான் எழுந்தருளிய அழகிய புகலிப்பதியை அடைந்து அங்கு மேவிய
பெருமானிடம் அன்பு செய்யுங்கள்.

     கு-ரை: கடி - மணம், கூவிளம் - வில்வம், மத்தம் - ஊமத்தம் பூ.
படி -உருவம். (நாற்றம் உடைமை ஆகிய) பண்புமாம். பாரிடம் - பூமி,
படிகொள்பாரிடம் - பெரிய உருவங்கொண்ட பூதகணங்கள் என்பதும்
பொருந்தும், பொடி - திருநீற்றுப் பொடி, அன்பு - பக்தி.