பக்கம் எண் :

442

1735.



பாதத் தாரொலி பல்சி லம்பினன்
ஓதத் தார்விட முண்ட வன்படைப்
பூதத் தான்புக லிந்ந கர்தொழ
ஏதத் தார்க்கிட மில்லை யென்பரே.   5
1736.



மறையி னான்ஒலி மல்கு வீணையன்
நிறையி னார்நிமிர் புன்ச டையனெம்
பொறை யினானுறை யும்பு கலியை
நிறையி னால்தொழ நேச மாகுமே.     6
1737.

கரவி டைமனத் தாரைக் காண்கிலான்
இரவி டைப்பலி கொள்ளும் எம்மிறை  


     5. பொ-ரை: பாதங்களில் பொருந்தி ஒலிக்கும் பல சிலம்புகளை
அணிந்தவனும், பாற்கடலிற் பொருந்தி எழுந்த விடத்தை உண்டவனும்,
பூதப்படைகளை உடையவனும் ஆகிய சிவபிரானது புகலிப் பதியை
அடைந்து தொழ, துன்பங்கள் வருவதற்கு இடம் இல்லை யாகும்.

     கு-ரை: பாதத்து - திருவடிகளில், ஆர் - பொருந்திய, ஒலி -
ஒலிக்கின்ற. ஓதத்து - பாற்கடலில். படைப்பூதத்தான் - பூதப் படை
உடையவன். ஏதத்தார்க்கு - துன்பத்திற்கு. ஏதம் - துன்பம், இங்கு
ஆர் விகுதி இழிவு பற்றியது. ‘பசியார்’ என்பது போன்றதொரு வழக்கு.

     6. பொ-ரை: வேதங்களை அருளியவனும், ஒலி நிறைந்த வீணையை
உடையவனும், பூரணனாய் நிமிர்த்துக் கட்டிய சிவந்த சடைமுடியை
உடையவனும், எமது பொறுமையை மலராகக் கொள்பவனும், ஆகிய
சிவபிரான் உறையும் புகலியையே குறிக்கொண்டு தொழ, அதுவே அன்பு
வழிபாடாக அமையும்.

     கு-ரை: மறையினான் - வேதகர்த்தா. வீணையன் - “மிக நல்ல
வீணைதடவி” நிறை - நிறைவு. பொறை - பொறுமை. எட்டுப் பூக்களுள்
ஒன்று. ஞானபூஜைக்குரியது. நிறை - சிவனையன்றி வேறு ஒன்றும்
வழிபாட்டிற்குக் குறிக்கோளாக் கொள்ளாத கற்பு. நேசம் - அன்பு.

     7. பொ-ரை: வஞ்சகம் பொருந்திய மனத்தாரைக் காண
விரும்பாதவனும், இரவில் பலியேற்கும் இயல்பினனும், எம் இறைவனும்,