பக்கம் எண் :

443

பொருவி டையுயர்த் தான்பு கலியைப்
பரவி டப்பயில் பாவம் பாறுமே.      7
1738.



அருப்பி னார்முலை மங்கை பங்கினன்
விருப்பி னான்அரக் கன்னு ரஞ்செகும்
பொருப்பி னான்பொழி லார்பு கலியூர்
இருப்பி னானடி யேத்தி வாழ்த்துமே.  8
1739.



மாலும் நான்முகன் தானும் வார்கழற்
சீல மும்முடி தேட நீண்டெரி
போலும் மேனியன் பூம்பு கலியுட்
பால தாடிய பண்பன் நல்லனே.       9


போர் வல்ல விடைபொறித்த கொடியினனும் ஆகிய சிவபிரானது புகலியைப்
பரவ நாம் செய்த பாவங்கள் அழியும்.

     கு-ரை: கரவு - வஞ்சகம், பொருவிடை - இடபக்கொடி. உயர்த்தவன் -
எடுத்துப் பிடித்தவன். பரவிட - வாழ்த்த. பாறும் -அழியும்.

     8. பொ-ரை: தாமரை அரும்பை ஒத்த தனங்களை உடைய
உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும், தன்மீது விருப்பினன்
ஆயினும் செருக்குற்ற காரணத்தால் இராவணனது வலிமையை அடர்த்த
கயிலைமலையினனும், பொழில் சூழ்ந்த புகலியூரைத்தன் இருப்பிடமாகக்
கொண்டவனும் ஆகிய சிவபிரானுடைய திருவடிகளை ஏத்தி வாழ்த்துங்கள்.

     கு-ரை: அருப்பு - அரும்பு. ஆர் - ஒத்த. விருப்பினான் - பக்தன்.
உரம் - வலிமை. செகும் - அழிக்கும். பொருப்பு - மலை. இருப்பு -வாசம்.
விருப்பு, பொருப்பு இருப்பு மூன்றும் இன்சாரியையும் ஆன் விகுதியும்
பெற்றுப், பெயரடியாகப் பிறந்த பெயராயின. விருப்பும் இருப்பும்
தொழிற்பெயர்.

     9. பொ-ரை: திருமால் நான்முகன் ஆகியோர் நீண்ட திருவடிப்
பெருமையையும், திருமுடியையும் தேட எரி போலும் மேனியனாய்
நீண்டவனும், அழகிய புகலியுள் பால் முதலியவற்றை ஆடி உறைபவனும்
ஆகிய பண்பினன் நமக்கு நன்மைகள் செய்பவன்.