1740.
|
நின்று
துய்ப்பவர் நீசர் தேரர்சொல்
ஒன்ற தாகவை யாஉ ணர்வினுள்
நின்ற வன்நிக ழும்பு கலியைச்
சென்று கைதொழச் செல்வ மாகுமே. 10 |
1741.
|
புல்லம்
மேறிதன் பூம்பு கலியை
நல்ல ஞானசம் பந்தன் நாவினாற்
சொல்லு மாலையீ ரைந்தும் வல்லவர்க்
கில்லை யாம்வினை யிருநி லத்துளே. 11 |
திருச்சிற்றம்பலம்
கு-ரை:
கழல்சீலம் - திருவடிப்பான்மை. சீலமோ உலகம் போலத்
தெரிப்பரிது (சித்தியார். 50). முடியும் என்று உம்மை கூட்டிக் கொள்க.
எரிபோலும் மேனியன் - தீ வண்ணன். பாலது ஆடிய - பாலால்
அபிடேகம் செய்யப் பெற்ற. நல்லன் - சிவன். அல்லனே எனவினாவாக்
கொள்ளலும் அமையும். புகலி உட்பாலது ஆடிய என்பதற்குத்
திருப்புகலியின் உட்பக்கத்திலுள்ள திருக் கோயிலில் திருக்கூத்தியற்றிய
எனலுமாம்.
10. பொ-ரை:
நின்று உண்பவராகிய இழிந்த சமணர்கள்,
தேரர்களாகிய பௌத்தர்கள் உரைகளை ஒருபொருளாகக் கொள்ளாத
அன்பர்களின் உணர்வினுள் நிற்கும் சிவபிரான் எழுந்தருளிய புகலியைச்
சென்று கைதொழச் செல்வங்கள் உளவாம்.
கு-ரை:
துய்ப்பவர் - உண்பவர். நின்றுண்போர் எனப்பிற
இடங்களில் வருதலும் காண்க. (பதிகம். 38. 95). நின்றுண் சமணர்
இருந்துண்தேரர் (பதிகம். 71).
ஒன்று - ஒருபொருள்,
வையா - வைத்து மதிக்காத, செல்வம் -
இம்மை, மறுமை. வீட்டுக்குரிய செல்வங்கள்.
11.
பொ-ரை: விடைமீது ஏறி வருபவனாகிய சிவபிரானது
அழகிய
புகலியை நன்மை செய்யும் ஞானசம்பந்தன் தன் நாவினால் போற்றிச்
சொல்லிய தமிழ் மாலையாகிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் வல்லவர்க்கு
அகன்ற இந்நிலவுலகத்தில் வினைகள் இல்லை.
|