பக்கம் எண் :

445

     கு-ரை: புல்லம்-எருது. ‘புல்வாய்’ போன்றதொரு காரணப் பெயர். ஏறி
- ஏறுகின்றவன். இகர விகுதியுடைய பெயர்ச்சொல். மாலை ஈர் ஐந்து -
இப்பத்துப்பாக்களாலாகிய மாலையை. இருநிலம் - ‘மாநிலம்’ ‘பெரும்பூமி’ .


திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ்
சிறுதேர்ப் பருவம்.

திண்மை படைத்த கயற்கொடி மாறன்
     வெப்பொடு கூனிமிரச்
செய்த மருந்து செழுந்தமிழ் வல்லி
     தழைக்க விருத்தியதோ

வெண்மை படைத்த வெலும்புட லாக
     நிறுத்திய வேதகனார்
வேத முடித்த பழம்பொரு ளுண்மை
     விளைத்தெழு வித்தகலா  

வண்மை புதுக்கிய கற்பக மன்பர்கள்
     வைத்த சரக்கறைசூழ்
வல்லம ணர்க்கு வழிப்பகை யீசன்
     மனத்து மகிழ்ச்சிவிடா

துண்மை விளைத்த சிவக்கலி கோப
     னுருட்டுக சிறுதேரே
உலகுடை யாளுத வுந்தனி யானை
     யுருட்டுக சிறுதேரே.

-ஸ்ரீமாசிலாமணி தேசிகர்