பதிக
வரலாறு:
ஞானப்பாலுண்ட
பெருமான் மன்றாடும் ஐயன் திருக்கூத்துக்
கும்பிட்டு, திருக்கழிப்பாலையைப் பணிந்துபாடி, கொன்றைச்
செம்மாலைவேணித் திருவுச்சி மேவியுறை அம்மானைப்பாடிய அருந்தமிழ்ப்
பதிகம் இது.
பண்:
இந்தளம்
ப. தொ. எண்:
162 பதிக எண்: 26
திருச்சிற்றம்பலம்
1742.
|
புடையி
னார்புள்ளி கால்பொ ருந்திய
மடையி னார்மணி நீர்நெல் வாயிலார்
நடையி னால்விரற் கோவ ணந்நயந்
துடையி னாரெம துச்சி யாரே. 1 |
1743.
|
வாங்கி
னார்மதிண் மேற்க ணைவெள்ளந்
தாங்கி னார்தலை யாய தன்மையர் |
1. பொ-ரை:
வயற்பக்கங்களில்
நண்டுகளை உடையதும்,
வாய்க்கால்களை அடுத்துள்ள நீர்மடையில் நீலமணி போன்று தெளிந்த நீரை
உடையதுமான நெல்வாயில் இறைவர் ஒழுக்கத்திற்குக்காட்டாக நால்விரல்
அளவுள்ள கோவண ஆடையை உடையவர். அவர் எம் முடிமேல் திகழும்
மாண்பினர்.
கு-ரை:
புடையின் - வயற்பக்கத்தில். ஆர் - பொருந்திய புள்ளி -
நண்டு. கால் - வாய்க்கால். மடையின் - நீர் மடையில். ஊர்ப்பெயர்க்
கேற்ப வளம் கூறப்பட்டிருக்கின்றது. நடை - ஒழுக்கம். நால்விரற் கோவணம்
ஐவிரற்கோவணம் உடைதனில் நால்விரற்கோவணவாடை (தி.1ப.39பா.2)
ஐவிரற் கோவணவாடை பாறருமேனியர் (தி.1ப.44 பா.6) இரண்டும் இவர்
திருமுறையுட் கூறப்பட்டன. நயந்து - விரும்பி. உடையினார் - உடை
உடுத்தவர். உச்சியார் என்பது இத்தலத்து இறைவர் திருப்பெயர், நெல்
வாயிலார், உடையினார் என்பன இறைவரைக் குறிப்பன.
2. பொ-ரை:
முப்புரங்கள் மீது கணை தொடுக்க வில்லினை,
வளைத்தவர். பெருகிவந்த கங்கைநீரைச் சடைமிசைத் தாங்கியவர்.
|