|
நீங்கு
நீரநெல் வாயி லார்தொழ
ஓங்கி னாரெம துச்சி யாரே. 2 |
1744.
|
நிச்ச
லேத்துநெல் வாயி லார்தொழ
இச்சை யாலுறை வாரெம் ஈசனார்
கச்சை யாவதோர் பாம்பி னார்கவின்
இச்சை யாரெம துச்சி யாரே. 3 |
1745
|
மறையி
னார்மழு வாளி னார்மல்கு
பிறையி னார்பிறை யோடி லங்கிய
நிறையி னாரநெல் வாயிலார் தொழும்
இறைவ னாரெம துச்சி யாரே. 4 |
மேலான தன்மைகளை உடையவர்.
ஓடும் நீரினைஉடைய நெல்வாயில்
என்னும் தலத்தினர். நாம் தொழுமாறு புகழால் ஓங்கி விளங்குபவர். அவர்
எம்முடிமேல் விளங்கும் மாண்பினர்.
கு-ரை:
மதில்மேல் - திரிபுரத்து மதிலின்மீது. கணை - பாணம்,
வாங்கினார் - (வில்லை) வளைத் (துஎய்) தார். வெள்ளம் - கங்கைப்
பெருக்கு, தலையாயதன்மையர் - முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப்
பழம்பொருளாந் தன்மை முதலிய ஆறும் உடையவர் ஷாட்குண்யர்.
எண்குணமுமாம். நீங்கும் நீர - ஓடும் நீர்ப் பெருக்காகிய வளமுடைய.
நீள்கு என்பதன் மரூஉவே நீங்கு என்பது. நீங்கிற்றெறூஉம் குறுகுங்கால்
தண் என்னுந் தீ (குறள் 1104) என்னுங் குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய
உரையை நுணுகி நோக்கின் இது விளங்கும்.
3.
பொ-ரை: நாள்தோறும் நாம் ஏத்தவும் தொழவும்
நெல் வாயிலில்
இச்சையோடு விளங்குபவர். எம் ஈசர். பாம்பைக் கச்சையாக அணிந்தவர்.
உயிர்கட்கு இச்சை உண்டாதற் பொருட்டு, தான் இச்சா சக்தியோடு
விளங்குபவர். அவர் எம் உச்சியில் விளங்கும் மாண்பினர்.
கு-ரை:
நிச்சல் - நித்தல், நாடோறும். கச்சை - அரையிற் கட்டும்
கயிறு. வடம். அரவக்கச்சு. கவின் - அழகு. இச்சையார் - உயிரின்
இச்சைக்குக் காரணமான இச்சா சத்தியை உடையவர். இச்சை உயிர்க்கு
அருள்நேசம் ஆகும் (சிவஞானசித்தியார், 83).
4.
பொ-ரை: வேதங்களை அருளியவர். மழுவாகிய வாளினை
|