1746.
|
விருத்த
னாகிவெண் ணீறு பூசிய
கருத்த னார்கன லாட்டு கந்தவர்
நிருத்த னாரநெல் வாயின் மேவிய
ஒருத்த னாரெம துச்சி யாரே. 5
|
1747.
|
காரி
னார்கொன்றைக் கண்ணி யார்மல்கு
பேரி னார்பிறை யோடி லங்கிய
நீரி னாரநெல் வாயி லார்தொழும்
ஏரி னாரெம துச்சி யாரே. 6
|
உடையவர். சடைமுடியில்
பொருந்திய பிறையினை உடையவர். வானளாவ
வளர்ந்து, நிறைந்து விளங்கும் நெற்பயிர் விளையும் வயல்களை வாயிலில்
உடையதால், நெல்வாயில் எனப்பெற்ற தலத்தில் எழுந்தருளியிருப்பவர்.
நம்மால் தொழத்தகும் இறைவர். அவர் எமது முடிமிசைத் திகழ்பவர்.
கு-ரை:
மறையினார் - வேதகர்த்தா. மழுவாளினார்
-மழுப்படையுடையவர். பிறையோடு இலங்கிய நிறையின் ஆர் அம் நெல்
என்பது வானளாவ வளர்ந்து நிறைய விளங்கிய அழகிய நெற்பயிர் என்று
குறித்தது. விண்தயங்கு நெல் என (பா. 10) வருதல் காண்க. நிறையினார்
- கற்புடைய கங்காதேவியை உடையவர் எனலுமாம்.
5. பொ-ரை:
முதியவராய்த் திருவெண்ணீறு அணிந்துள்ள தலைவர்.
தீயில் ஆடுதலை உகந்தவர். நடனம் புரிபவர். நெல்வாயில் என்னும்
தலத்தில் விளங்கும் ஒருவர் என்னும் பெயருக்கு உரியவர். அவர் எமது
உச்சியில் விளங்குபவர்.
கு-ரை:
விருத்தன் - முதியவன். கருத்தன் - தலைவன். கனலாட்டு
-தீயில் ஆடல். உகந்தவர் - விரும்பியவர். நிருத்தனார் - கூத்தர்.
ஒருத்தனார் - தனிமுதல்வர்.
6.
பொ-ரை: கார்காலத்தில் மலரும் கொன்றைமலரால்
இயன்ற
கண்ணியைச் சூடியவர். நிறைந்த புகழை உடையவர். பிறைசூடி விளங்கும்
இயல்பினர். நெல் வாயிலில் உறைபவர். நாம் தொழத்தகும் அழகர். அவர்
எமது உச்சியில் விளங்குபவர்.
கு-ரை:
காரின் ஆர் கொன்றை - கார்காலத்தில் மலரும்
|