பக்கம் எண் :

449

1748.



ஆதி யாரந்த மாயி னார்வினை
கோதி யார்மதில் கூட்ட ழித்தவர்
நீதி யாரநெல் வாயி லார்மறை
ஓதி யாரெம துச்சி யாரே.          7
1749.



பற்றி னானரக் கன்க யிலையை
ஒற்றி னாரொரு கால்வி ரலுற
நெற்றி யாரநெல் வாயி லார்தொழும்
பெற்றி யாரெம துச்சி யாரே.        8


கொன்றைமலர். ‘கார்நறுங் கொன்றை’ (புறம் - கடவுள் வாழ்த்து) மல்குபேரினார் - நிறைந்த பெயர் (புகழ்) உடையார். நீரினார் - கங்கை (ச்சடை) யர். இலங்கிய - விளங்கிய, பிறைக்கும், நீர்க்கும் பொது அடைமொழியாகக் கொள்ளலும் ஆம். ஏரினார் - அழகர்.

     7. பொ-ரை: உலகிற்கு ஆதிஅந்தமாக விளங்குபவர். குரோதமான செயல்களைப் புரிந்த அசுரர்களின் மதில் கூட்டங்களை அழித்தவர். நீதியை
உடையவர். நெல் வாயிலில் எழுந்தருளியிருப்பவர். மறைகளை ஓதியவர்.
அவர் எமது உச்சியில் உறைபவர்.

     கு-ரை: ஆதியார் - முதல்வர், அந்தமாயினார் - (சங்காரகாரணர்)
முடிவுமானார். வினை கோதியார் - குரோத வினையுடையார். திரிபுரத்தசுரர்.

     குரோதி என்பதன் திரிபு கோதி என்பது. ‘கோதித்த நெஞ்சன்’
(பாரதம்). மறையோதியார் - வேதங்களை ஓதி யருளியவர்.

     8. பொ-ரை: கயிலைமலையைப் பற்றி எடுத்த இராவணனை ஒருகால்
விரலைப் பொருத்தி அவன் தலைகள் முழுவதும் அடர ஒற்றியவர்.
நெல்வாயிலில் விளங்குபவர். நாம் தொழும் தன்மையர். அவர் எமது
உச்சியில் உறைபவர்.

     கு-ரை: நெற்றி - இராவணனது உச்சி. ஆர் - பொருந்த. பெற்றியார் -
தன்மையையுடையவர்.

     ஒரு கால்விரல் உறநெற்றி ஆர ஒற்றினார் என்று இயைக்க.