பக்கம் எண் :

450

1750.



நாடி னார்மணி வண்ண னான்முகன்
கூடி னார்குறு காத கொள்கையர்
நீடி னாரநெல் வாயி லார்தலை
ஓடி னாரெம துச்சி யாரே.           9
1751.



குண்ட மண்டுவர்க் கூறை மூடர்சொற்
பண்ட மாகவை யாத பண்பினர்
விண்ட யங்குநெல் வாயி லார்நஞ்சை
உண்ட கண்டரெம் முச்சி யாரே      10
1752.

நெண்ப யங்குநெல் வாயில் ஈசனைச்
சண்பை ஞானசம் பந்தன்சொல் லிவை


‘திருவொற்றாடை’.

     9. பொ-ரை: நீலமணி போன்ற நிறத்தினனாகிய திருமாலும்,
நான்முகனும் கூடித் தேடிக்குறுக முடியாத இயல்பினராய் எரி உருவொடு
நீடியவர். நெல்வாயிலில் எழுந்தருளி யிருப்பவர். தலை ஓட்டைக் கையில்
உடையவர். அவர் எமது உச்சியில் உறைபவர்.

     கு-ரை: நாடினார் - விரும்பினவர். தேடினவர். மணிவண்ணன் -
திருமால், கூடினார் - கூடி, முற்றெச்சம், குறுகாத - (கண்டு) நெருங்காத.
நீடினார் - சோதிப்பிழம்பாக நீண்டார். தலை ஓடினார் -பிரமகபாலத்தை
உடையவர்.

     10. பொ-ரை: குண்டர்களாகிய சமணர்களும், துவர் ஏற்றிய
ஆடையை அணிந்த மூடர்களாகிய புத்தர்களும் கூறும் சொற்களைப்
பொருளாகக் கொள்ளாத பண்பினர். வானளாவ உயர்ந்துள்ள நெற்பயிர்கள்
நிறைந்த நெல் வாயில் என்னும் தலத்தில் விளங்குபவர். அவர் எமது
உச்சியார்.

     கு-ரை: குண்டு அமண் - குண்டராகிய அமணர். துவர்க் கூறை
-துவர்ப்பேறிய ஆடை. பண்டம் - பொருள். விண் தயங்கு - வான்
(அளாவி) விளங்கிய, நஞ்சு - விடம்.

     11. பொ-ரை: நெல்வாயில் என்னும் தலத்தில் நட்புக்கொண்டு