பக்கம் எண் :

451

பண்ப யன்கொளப் பாட வல்லவர்
விண்ப யன்கொளும் வேட்கை யாளரே.  11

திருச்சிற்றம்பலம்


விளங்கும் ஈசனை, சண்பைப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய
சொல்மாலையாகிய இத்திருப்பதிகத்தைப் பண்ணின்பயன் கொள்ளுமாறு
பாடி வழிபட வல்லவர், வீட்டுலக இன்பத்தை அடையும் வேட்கையினர்
ஆவர்.

     கு-ரை: நெண்பு - நண்பு. அயங்கு - அசங்கிய. (பதி. 140).
சண்பை - சீகாழி, ‘பண்பயன்கொளப் பாடவல்லவர்’ என்றதால் தேவாரம்
பாடும்முறையை அறியும் இன்றியமையாமை புலனாகின்றது. விண் -
வீட்டுலகம். பயன் - பேரின்பம், இம்மை மறுமைப் பயனுமாம்.
வேட்கையாளர் - விருப்பத்தை ஆள்பவர்.

திருஞானசம்பந்தர் புராணம்

கைம்மான் மறியார் கழிப்பாலை யுள்ளணைந்து
மெய்ம்மாலைச் சொற்பதிகம் பாடி விரைக்கொன்றைச்
செம்மாலை வேணித் திருவுச்சி மேவியுறை
அம்மானைக் கும்பிட்ட டருந்தமிழும் பாடினார்.

பாடும் பதிக இசை யாழ்ப்பாண ரும்பயிற்றி
நாடுஞ் சிறப்பெய்த நாளுநடம் போற்றுவார்
நீடுந் திருத்தில்லை அந்தணர்கள் நீள்மன்றுள்
ஆடுங் கழற்கணுக்க ராம்பே றதிசயிப்பார்.

-சேக்கிழார்.