27.
திருஇந்திரநீலப் பருப்பதம் |
பதிக
வரலாறு:
சண்பைவேந்தர்
திருக்காளத்தியிலிருந்து அம்மலைத் தேனை
அறிவால் நுகர்ந்த நாளில், அருந்தமிழ் வழக்கில்லாத வடக்கிலும்
குடக்கிலும் உள்ள சிவதலங்களை நினைந்து பாடினார். அவை வடகயிலை,
திருக்கேதாரம், கோகர்ணம், திருப்பருப்பதம், திருஇந்திரநீலப் பருப்பதம்
என்பவை. அதனால் உள்க நல்கும் என்று அருளியதை இதன் முதற்
பாட்டிறுதியிற் காண்க.
பண்:
இந்தளம்
ப. தொ. எண்:
163 பதிக
எண்: 27
திருச்சிற்றம்பலம்
1753.
|
குலவு
பாரிடம் போற்ற வீற்றிருந்
திலகு மான்மழு வேந்து மங்கையர்
நிலவு மிந்திர நீலப் பர்ப்பதத்
துலவி னானடி யுள்க நல்குமே. 1
|
1754.
|
குறைவி லார்மதி
சூடி யாடல்வண்
டறையு மாமலர்க் கொன்றை சென்னிசேர்
இறைவ னிந்திர நீலப் பர்ப்பதத்
துறைவி னான்றனை யோதி யுய்ம்மினே. 2
|
1.
பொ-ரை: விளங்கும் மான் மழுஏந்திய அகங்கையாளனாய்த்
தன்னிடம் அன்பு செய்யும் பூதகணங்கள் போற்ற, விளங்கித் தோன்றும்
இந்திர நீலப்பர்வதத்து வீற்றிருந்து உலாவுகின்ற சிவபிரான் தன்
திருவடிகளை நினைவார்க்கு அருள் புரிவான்.
கு-ரை:
பாரிடம் - பூதகணம். அங்கையன் - அகங்கையுடையவன்.
பர்ப்பதத்து - மலைமேல். உலவினான் -உலாவியவன். உள்க -
தியானம்செய்ய. நல்கும். அருள்செய்யும்.
2.
பொ-ரை: மேலும் குறைதல் இன்றி என்றும் ஒரு
கலையாய்
நிறைவுபெறும் பிறையை, வண்டுகள் இசைக்கும் சிறந்த கொன்றை
|