1755.
|
என்பொ
னென்மணி யென்ன வேத்துவார்
நம்ப னான்மறை பாடு நாவினான்
இன்ப னிந்திர நீலப் பர்ப்பதத்
தன்பன் பாதமே யடைந்து வாழ்மினே. 3 |
1756.
|
நாச
மாம்வினை நன்மை தான்வரும்
தேச மார்புக ழாய செம்மையெம்
ஈச னிந்திர நீலப் பர்ப்பதம்
கூசி வாழ்த்துதுங் குணம தாகவே. 4 |
மலர் சூடிய சென்னியில்
சேர்த்துள்ள இறைவனும், இந்திரநீலப் பருவதத்து
உறைபவனுமாகிய சிவபிரானைப் போற்றி உய்யுங்கள்.
கு-ரை:
குறைவு இல் ஆர் மதி - குறைதல் இன்றி நிறைவு பொருந்திய
பிறை. கடவுள் சடைமேல் உள்ள பிறைக்குக் குறைவும் அழிவும் இல்லை.
உறைவினான் - வாழ்தலை உடையவன்.
3.
பொ-ரை: என் பொன்னே என்மணியே என்று புகழ்ந்து
போற்றுவாரை விரும்புபவன், நான்கு மறைகளையும் பாடும் நாவினை
உடையவன், இன்பவடிவினன், இந்திரநீலப் பர்வதத்து அன்பு உடையவன்
ஆகிய சிவபிரான் திருவடிகளையே சரணாக அடைந்து வாழுங்கள்.
கு-ரை:
என்பொன், என்மணி என்ன ஏத்துவார் நம்பன் - என்
பொன்னே என்மணியே என்று எடுத்துப் புகழ்ந்து போற்றுவாரை
விரும்பியருள்பவன், நம்பும் மேவும் நசையா கும்மே என்றார்
தொல்காப்பியர். பாதமே என்றதில் ஏகாரம் பிரிநிலை.
4,
பொ-ரை: நம் வினைகள் நாசமாகவும், நன்மைகளே
வந்தெய்தவும்,
உலகளாவிய புகழுடைய செம்மையாளனாகிய எம் ஈசனும் இந்திரநீலப்
பருவதத்து உறைவோனுமாகிய சிவபிரானை, நும் சிறுமையையும் அவன்
பெருமையையும் எண்ணி நற்குணங்கள் பலவும் அமைய வாழ்த்துங்கள்.
கு-ரை:
வினை நாசம் ஆம் என்க. நன்மைவரும். கூசிவாழ்த்துதும் -
இறைவன் பெருமையையும் நம் சிறுமையையும் எண்ணிக்கூசி, வாழ்த்துவோம்.
நேசம் தன்பால் இல்லாத நெஞ்சத்து நீசர்தம்மைக்
|