1757.
|
மருவு
மான்மட மாதொர் பாகமாய்ப்
பரவு வார்வினை தீர்த்த பண்பினான்
இரவ னிந்திர நீலப் பர்ப்பதத்
தருவி சூடிடு மடிகள் வண்ணமே. 5 |
1758.
|
வெண்ணி
லாமதி சூடும் வேணியன்
எண்ணி லார்மதி லெய்த வில்லினன்
அண்ண லிந்திர நீலப் பர்ப்பதத்
துண்ணி லாவுறு மொருவ னல்லனே. 6 |
1759.
|
கொடிகொள்
ஏற்றினர் கூற்று தைத்தவர்
பொடிகொள் மேனியிற் பூண்ட பாம்பினர் |
கூசன் காண் கூசாதார்
நெஞ்சுதஞ்சே குடிகொண்ட குழகன்காண் என்ற
அப்பர் திருவாக்கில் வந்த கூசுதல் வேறு. இது வேறு. தேசம் ஆர் - தேசம்
(முழுதும்) நிறைந்த.
5. பொ-ரை:
இந்திர நீலப்பருவதத்து இறைவனது இயல்பு அருவிகளை
மாலையாகச் சூடி மகிழ்வதோடு தன்னைமருவிய மான்போன்ற கண்ணளாகிய
உமையம்மை ஒருபாகமாக விளங்க, தன்னைப் பரவுவார் வினைகளைப்
போக்குவதாகும்.
கு-ரை:
மருவு . . . பண்பினான் - அம்மையப்பராகத் தொழுத அன்பர்
கன்மத்தைத்தீர்த்த குணமுடையவன். இரவன் - இரத்தலைச் செய்தவன்,
இரவாகியவன். அன்பர் இரத்தற் குரிய வள்ளல். அருவி -மலையருவி,
கங்கையுமாம். வண்ணம் - இயல்பு.
6.
பொ-ரை: வெண்மையான நிலவைத் தரும் மதியைச்
சூடும்
சடையினனும் பகைவரின் திரிபுரங்களை அழித்த வில்லினனும்,
தலைமையாளனும் ஆகிய இறைவன், இந்திரநீலப்பருவதத்துள் விளங்கும்
ஒருவன் அல்லனோ?.
கு-ரை:
வேணி - சடை. எண்ணிலார் - நினையாத பகைவர். வில் -
மேருவில். அல்லனே ஏகாரம் வினா.
7.
பொ-ரை: கொடியில் கொண்ட விடையை உடையவர்.
எமனை
உதைத்தவர். பொடியணிந்த மேனியில் பாம்பினை
|