பக்கம் எண் :

455

  அடிகள் இந்திர நீலப் பர்ப்பதம்
உடைய வாண னுகந்த கொள்கையே. 7
1760.



எடுத்த வல்லரக் கன்க ரம்புயம்
அடர்த்த தோர்விர லானவ னையாட்
படுத்த னிந்திர நீலப் பர்ப்பதம்
முடித்த லம்முற முயலு மின்பமே.    8
1761.



பூவி னானொடு மாலும் போற்றுறும்
தேவ னிந்திர நீலப் பர்ப் பதம்
பாவி யாவெழு வாரைத் தம்வினை
கோவி யாவருங் கொல்லுங் கூற்றமே. 9


அணிந்தவர், தலைவர். இந்திரநீலப் பருவதத்துள் வாழும் இறைவனின்
இயல்புகள் இவையாகும்.

     கு-ரை:ஏற்றினர் - விடையுடையவர். கூற்று - யமன். உயிர்
வேறுஉடல் வேறாகக் கூறுபடுத்துவோன் கூற்றுவன். பொடி - திருநீறு.
வாணன்-வாழ்நன். உகந்த - உயர்ந்த. விரும்பிய.

     8. பொ-ரை: கயிலை மலையை எடுத்த இராவணனின் கைகள்
தோள்கள் ஆகியவற்றை அடர்த்த விரலால் அவ்விராவணனை
ஆட்படுத்தியவன் உறையும் இந்திர நீலப்பருவதத்தை முடிகளால் வணங்க
இன்பம் எளிதின் வாய்க்கும்.

     கு-ரை: கரம் - கை. புயம் - தோள். அடர்த்து - நெருங்கியது.
விரலான் - விரலால். படுத்தன் - படுத்தியவன். முடித்தலம் - உச்சியிடம்.
உச்சியிலுள்ள ஸ்தலமுமாம். உற - அடைந்து வழிபட. முயலும் இன்பம் -
நாம் அடைய முயலும் இன்பமே எளிதின் வாய்க்கும் என்றபடி.

     9. பொ-ரை: தாமரை மலரில் எழுந்தருளிய பிரமனோடு திருமால்
போற்றி வணங்கும் தேவனாகிய இந்திரநீலப் பருவதத்துள் உறையும்
இறைவனை நினையாதவரை வினைகள் சினக்கும். கூற்றம்கொல்லும்.