1762.
|
கட்டர்
குண்டமண் டேரர் சீரிலர்
விட்ட ரிந்திர நீலப் பர்ப்பதம்
எட்ட னைநினை யாத தென்கொலோ
சிட்ட தாயுறை யாதி சீர்களே. 10 |
1763.
|
கந்த
மார்பொழில் சூழ்ந்த காழியான்
இந்தி ரன்றொழு நீலப் பர்ப்பதத்
தந்த மில்லியை யேத்து ஞானசம்
பந்தன் பாடல்கொண் டோதி வாழ்மினே. 11 |
திருச்சிற்றம்பலம்
கு-ரை:
பூவினான்-செந்தாமரை மலரிலுள்ள பிரமன. போற்று-துதி,
உறும்-அடையும். பாவியாது-தியானம் பண்ணாமல், கோவியா-கோபித்து,
கூற்றம் வரும் என்க.
10. பொ-ரை:
கட்டானவும் பருமையானவுமான உடலினராகிய
சமண புத்தர்கள் சிறப்பற்றவர். நம்மால் விட்டொழியத் தக்கவர். அவர்களை
விடுத்து இந்தி லப் பருவதத்து உறையும் மேலான ஆதியின் சீர்களை
எள்ளளவும் நினையாதிருப்பது ஏனோ?.
கு-ரை.
கட்டர்-உடற்கட்டுடையவர், சீர்-சிறப்பு. விட்டர்-வி்ட்டொழிய
நின்றவர், விட்டல்வீடுதல் திருவிளையாடல். எள்தனை-எள்ளளவும்.
சிட்டதாய்-நல்லறிவுமயமாய். உறை-வாழும.் ஆதி-முதல்வன்.
11. பொ-ரை:
மணம் கமழும் பொழில் சூழ்ந்த காழிப் பதியானாகிய
ஞானசம்பந்தன் இந்திரனால் வழிபடப் பெற்ற நீலமலையில் விளங்கும்
அந்தம் இல்லாத பெருமானை ஏத்திய பாடல்களை ஓதி வழிபட்டு வாழுங்கள்.
கு-ரை:
கந்தம்-மணம். அந்தம் இல்லி-முடிவில்லாதவன்-அநந்தன்.
|