பதிக
வரலாறு:
பாண்டிக் கொடுமுடியை
அடைந்து வணங்கித் தமிழ் மாலை
மகிழ்ந்துசாத்தி, வெஞ்சமாக்கூடல் விடையவர் தானம் பல போற்றிக்
கிழக்கில் போந்து, திருவானிலைக் கோயிலையுடைய கருவூரை மருவி
அடைந்து அக்கோயிலுட் புகுந்து இறைஞ்சிப் பாடிய நல்லிசை
வண்டமிழ்ச் சொற்றொடை இத்திருப்பதிகம்.
பண்:
இந்தளம்
ப.தொ.எண்: 164
பதிக
எண்: 28
திருச்சிற்றம்பலம்
1764.
|
தொண்டெ
லாமலர் தூவி யேத்தநஞ்
சுண்ட லாருயி ராய தன்மையர்
கண்ட னார்கரு வூரு ளானிலை
அண்ட னாரரு ளீயு மன்பரே. 1 |
1765.
|
நீதி
யார்நினைந் தாய நான்மறை
ஓதி யாரொடுங் கூட லார்குழைக் |
1. பொ-ரை:
தொண்டர்கள் மலர் தூவி ஏத்த நஞ்சினை
உண்டவரும், அரிய உயிர் போன்றவரும், கற்கண்டு போல் இனிப்பவருமாய
இறைவர், கருவூர் ஆனிலையில் விளங்கும் தேவராவார். அருள் வழங்கும்
அன்புடையவர் அவர்.
கு-ரை:
தொண்டு எலாம்-தொண்டர் எல்லாரும். உண்டல்-
உண்ணல், உண்டலாருமாம். ஆருயிர்-அரியவுயிர், உயிர்க்குயிர். கண்டு
அனார்-கண்டுபோலினிப்பவர். திருக்கருவூரில் உள்ள திருக்கோயில்
ஆநிலை, ஆன்நிலை எனப்படும். பசுபதி என்னுந் திருப்பெயருண்மை
உணர்க. அண்டனார்-தேவர். அன்பர்-அன்பையுடையர்.
2. பொ-ரை:
நீதியின் வடிவானவர். நினைந்து ஆராயத்தக்கதாய
நான்கு மறைகளை ஓதும் அந்தணர்களோடு கூடியவர். குழை
|