|
காதி
னார்கரு வூரு ளானிலை
ஆதி யாரடி யார்த மன்பரே. 2 |
1766.
|
விண்ணு
லாமதி சூடி வேதமே
பண்ணு ளார்பர மாய பண்பினர்
கண்ணு ளார்கரு வூரு ளானிலை
அண்ண லாரடி யார்க்கு நல்லரே. 3 |
1767.
|
முடியர்
மும்மத யானை யீருரி
பொடியர் பூங்கணை வேளைச் செற்றவர்
கடியுளார் கரு வூரு ளானிலை
அடிகள் யாவையு மாய ஈசரே. 4 |
அணிந்த திருச்செவியர்.
கருவூர் ஆனிலையில் விளங்கும் முதல்வர்.
அடியார் களுக்கு அன்பர்.
கு-ரை:
நீதியார்-நீதியே வடிவான சிவபெருமான். நினைந்து
ஆய நான்மறை ஓதியார்-எண்ணி ஆராய்ந்த நான்கு மறைகளை
ஓதுவார், கூடலார்-கூடுவார். குழைக்காதினார்-குழையணிந்த
திருச்செவியை உடையவர். குழை தோட்டின் வேறானது; இதனைக்
குழையும் சுருள்தோடும் என்ற திருவாசகத்தானறிக. ஆதியார்-முதல்வர்.
அடியார்தம் அன்பர்-அடியார்களுக்கு அன்பராயிருப்பர்.
3. பொ-ரை:
வானத்தில் உலாவும் மதியைச் சூடியவர். வேத
இசையாக விளங்குபவர். மேலான பண்பினர். கூத்தர். கருவூர் ஆனிலையில்
விளங்கும் தலைவர். அடியவர்கட்கு நல்லவர்.
கு-ரை:
விண்-ஆகாயம். சூடி-வினையெச்சம். வேதமே பண் உளார்-
வேதத்தில் சுரரூபமாக இருப்பவர். பரம் ஆய பண்பினர் - மேலாகிய
பண்பை உடையவர். பண்பு-எண் குணம். கண்ணுள்-கூத்து. கண்ணுளார்-
கூத்தர். கண்-உளார். உயிர்களுக்குக் கண்ணாயிருப்பவர். பண்பினர்கண்
உளாருமாம். அண்ணலார்-தலைவர், பெரியர். அடியார்க்கு நல்லார் என்பது
இறைவன் திருப்பெயர்களுள் ஒன்று.
4. பொ-ரை:
சடைமுடியை உடையவர். மும்மதங்களை உடைய
யானையை உரித்தவர். வெண்பொடி பூசியவர். மன்மதனைச் செற்ற
|