பக்கம் எண் :

459

1768.



பங்க யம்மலர்ப் பாதர் பாதியோர்
மங்கை யர்மணி நீல கண்டர்வான்
கங்கை யார்கரு வூரு ளானிலை
அங்கை யாடர வத்தெம் மண்ணலே. 5
1769.

தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியின்
மேவர் மும்மதி லெய்த வில்லியர்


வர். சிறப்புடையவர். கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவர். அவர்
எல்லாமாய் விளங்கும் ஈசராவார்.

     கு-ரை: முடியர்-சடைமுடிஉடையவர். வணங்குவோர் உச்சியருமாம்
(பதி.162 “உச்சியார்”) மும்மதம்-கன்னம், கோசம், கை என்னும்
மூன்றிடத்தும் ஒழுகும் மதநீர், “கன்னமும் கோசமும் கையும் என்னும்,
இன்னமுத்தானத்து இழிவன மும்மதம்” . (பொருட்டொகை நிகண்டு)
ஈர்த்தல்-உரித்தல். ஈர் உரி-உரித்த தோல். உரியென்பது முதனிலைத்
தொழிலாகு பெயர். பொடியர்-திருவெண்பொடியை உடையவர். உரியை
அணிந்த பொடியர். வேளை-மன்மதனை, கருவேளை. செற்றவர்  - 
அழித்தவர். கடி-சிறப்பு, அதிசயம.் யாவையும் ஆய ஈசர் - ‘ஒருவனே
எல்லாமாகி அல்லனாய் உடனுமாவான்’ (சித்தி. 46) “முழுதுமாகிய மூர்த்தி)”
(பா.9).

     5. பொ-ரை: தாமரை போன்ற திருவடியர். தம் திருமேனியில்
பாதியாக உமையம்மையைக் கொண்டவர். நீல மணி போன்ற கண்டத்தினர்.
ஆகாய கங்கையைத் தாங்கியவர். அழகிய கைகளின் மேல் ஆடும் பாம்பை
உடையவர், அவர் கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவராவார்.

     கு-ரை: பங்கயம்-(சேற்றில் முளைப்பது) தாமரை. மலர்ப்பாதர்-மலர்
போன்ற திருவடியை உடையவர். பாதி ஓர் மங்கையர்-அர்த்தநாரீச்சுரர்.
மணி-அழகிய. வான் கங்கையர்-ஆகாச கங்கையை அணிந்தவர். அம்-
அழகு. ஆடு அரவத்து-ஆடுகின்ற பாம்பை உடைய.

     6. பொ-ரை: தேவர்கட்கு எல்லாம் தேவர். திங்கள், பாம்பு
ஆகியவற்றை முடிமேல் சூடியவர். மும்மதில்களை எய்த வில்லை
உடையவர். எல்லோரையும் காப்பவர். கருவூர் ஆனிலையில் விளங்கும்
இவர்