|
காவ
லர்கரு வூரு ளானிலை
மூவ ராகிய மொய்ம்ப ரல்லரே. 6 |
1770.
|
பண்ணி
னார்படி யேற்றர் நீற்றர்மெய்ப்
பெண்ணி னார்பிறை தாங்கு நெற்றியர்
கண்ணி னார்கரு வூரு ளானிலை
நண்ணி னார்நமை யாளு நாதரே. 7 |
1771.
|
கடுத்த
வாளரக் கன்க யிலையை
எடுத்த வன்றலை தோளுந் தாளினால்
அடர்த்த வன்கரு வூரு ளானிலை
கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே. 8 |
அயன், அரி, அரன்
ஆகிய மும்மூர்த்திகளுக்கும் சக்தி வழங்கியவர்
அல்லரோ?.
கு-ரை:
சென்னி-தலை. மேவர்-பொருந் துதலை உடையவர்.
வில்லியர்-மேருவாகிய வில்லை உடையவர். மூவர் ஆகிய மொய்ம்பர்
அல்லரே-அயன் முதலிய மூவரு மாகிய சக்தியை உடையவர் அல்லரோ.
மொய்ம்பு-சக்தி.
7. பொ-ரை:
பண்களின் வடிவாய் இருப்பவர். படிந்து ஏறுதற்கு
உரிய விடையூர்தியர். நீறணிந்தவர். திருமேனியில் உமை அம்மையைக்
கொண்டுள்ளவர். பிறை சூடிய திருமுடியர். நெற்றியில் கண்ணுடையவர்.
கருவூர் ஆனிலையில் எழுந்தருளியிருப்பவர். நம்மை ஆளும் நாதர் அவர்.
கு-ரை:
பண்ணினார்-பண்ணாயிருப்பவர். படி ஏற்றார்-படி (ந்து அமர்)
தற்குரிய விடையை உடையவர். மெய்ப்பெண்ணினார். பெண்ணை ஒருபாற்
கொண்ட மெய்யார். மெய்-உடம்பு. நெற்றியர் உச்சியர். கண்ணினார்-
உலகுக்கொடு கண்ணாயிருப்பவர். ஞானக் கண்ணருமாம். நண்ணினார்-
சேர்ந்தார். நமை-நம்மை. நாதர்-தலைவர், உடையவர்.
8. பொ-ரை:
வாளோடு சினந்து வந்து கயிலையைப் பெயர்த்த
இராவணனின் தலை தோள் ஆகியவற்றைத் தாளினால் அடர்த்தவன்.
|