பக்கம் எண் :

461

1772.



உழுது மாநிலத் தேன மாகிமால்
தொழுது மாமல ரோனுங் காண்கிலார்
கழுதி னான்கரு வூரு ளானிலை
முழுது மாகிய மூர்த்தி பாதமே.    9
1773.



புத்தர் புன்சம ணாதர் பொய்யுரைப்
பித்தர் பேசிய பேச்சை விட்டுமெய்ப்
பத்தர் சேர்கரு வூரு ளானிலை
அத்தர் பாத மடைந்து வாழ்மினே. 10
1774.

கந்த மார்பொழிற் காழி ஞானசம்
பந்தன் சேர்கரு வூரு ளானிலை


பின் அவனுக்கு அருள் கொடுத்தவன். கூத்தன். அவன் கருவூர்
ஆனிலையில் விளங்கும் பெரியவன்.

     கு-ரை: கடுத்த-கோபித்த. தலை தோளும்-தலைகளும் தோள்களும்.
தாள்-திருவடி. அருள்கொடுத்தவன் என்க.

     9. பொ-ரை: எல்லாமாய் விளங்கும் இறைவனின் பாதங்களைப்
பன்றி வடிவெடுத்துப் பெரிய நிலத்தை உழுது சென்று முயன்ற திருமால்,
பிரமன் ஆகியோர் தொழுதும் காண்கிலர். அத்தகைய பெருமான் கருவூர்
ஆனிலையில் நாம் எளிதின் வணங்க எழுந்தருளியுள்ளான்.

     கு-ரை: ஏனம்-பன்றி. கழுதினான்-பேயன். முழுதும் ஆகிய மூர்த்தி-
“யாவையும் ஆய ஈசர்” (பா.4)

     10. பொ-ரை: புத்தர்களும் புன்மையான அறிவற்ற பொய்யுரைகளைக்
கூறும் பித்தர்களாகிய சமணர்களும் பேசும் பேச்சுக்களை விட்டு
உண்மையான பக்தர்கள் சேரும் கருவூர் ஆனிலையில் விளங்கும் மேலான
இறைவனின் திருவடிகளை அடைந்து வாழுங்கள்.

     கு-ரை: ஆதர்-அறிவிலார். மெய்ப்பத்தர்-உண்மை அன்பர்.
அத்தர்-இறைவர், உயர்ந்தவர்.

     11. பொ-ரை: மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த சீகாழிப்
பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் கருவூர் ஆனிலையை அடைந்து