திருஞானசம்பந்தர்
புராணம்
செல்வக்
கருவூர்த் திருவா னிலைக்கோயில் சென்றிறைஞ்சி
நல்லிசை வண்டமிழ்ச் சொற்றொடை பாடிஅந் நாடகன்று
மல்கிய மாணிக்க வெற்பு முதலா வணங்கிவந்து
பல்கு திரைப்பொன்னித் தென்கரைத் தானம் பலபணிவார்.
-சேக்கிழார்.
திருச்சுழியற்
புராணம்
பிரமபுரச்
செழுஞ்சுடரை வேணுபுரக் கோவைப்
பேசுகொச்சை வயஅமுதைப் பூந்தராய்ப் பேற்றைச்
சிரபுரக்கல் விக்கடலைப் புறவநான் மறையைத்
திருத்தோணி புரக்கனியைச் சண்பைநறுந் தேனை
விரகுறுகா ழிப்பொருளைக் கழுமலப்பே ரொளியை
மிகுபுகலிக் குணவரையை வெங்குருநா யகத்தைத்
தரணியமண் அழித்தபர சமயகோ ளரியைத்
தப்பாமல் மெய்ப்பான்மை அன்பினில்தாழ்ந் துவப்பாம்.
-ஆராவமுதாசாரியார்.
|