பதிக
வரலாறு:
137
-வது தலைப்பைக் காண்க
திருவிராகம்
பண்:
இந்தளம்
ப.தொ.எண்: 165
பதிக
எண்: 29
திருச்சிற்றம்பலம்
1775.
|
முன்னிய
கலைப்பொருளு மூவுலகில் வாழ்வும்
பன்னிய வொருத்தர்பழ வூர்வினவின் ஞாலந்
துன்னியிமை யோர்கள்துதி செய்துமுன் வணங்குஞ்
சென்னியர் விருப்புறு திருப்புகலி யாமே. 1 |
1776.
|
வண்டிரை
மதிச்சடை மிலைத்தபுனல் சூடிப்
பண்டெரிகை யாடுபர மன்பதிய தென்பர்
புண்டரிக வாசமது வீசமலர்ச் சோலைத்
தெண்டிரை கடற்பொலி திருப்புகலி யாமே. 2 |
1. பொ-ரை:
பொருந்திய
கலைகளின் பொருளையும் மூவுலக
வாழ்வையும் உயிர்கட்கு ஆராய்ந்து அளித்துக் காக்கும் ஒருவராக விளங்கும்
சிவபிரானின் பழமையான ஊர் யாதென வினவின், தேவர்கள் மண்ணுலகை
அடைந்து துதி செய்து வணங்கும் சென்னியில் உள்ளவராகும் இறைவர்
எழுந்தருளிய திருப்புகலி என்னும் தலமாகும்.
கு-ரை:
முன்னிய-பொருந்திய, முந்திய, நினைக்க. கலை-அறுபத்து
நான்கு கலைகள்; உவமையிலாக் கலைஞானம் எனலுமாம். மூவுலக வாழ்வு
- மூன்று உலகத்திலும் வாழும் வாழ்க்கை. பன்னிய-ஆராய்ந்த,
ஒருத்தர்-தனிமுதல்வர், வினவின்-கேட்டால்; ஞாலம்-பூமி. துன்னி-நெருங்கி,
இமையோர்கள்-தேவர்கள். துதி-தோத்திரம், சென்னியர் ஆரம்போல
மேம்பட்டவர், சென்னியிலுள்ளவர் என்றுமாம்.
2. பொ-ரை:
வளமையான அலைகளோடு கூடிய கங்கையை மதி
சூடிய சடையின்மேல் தாங்கிப் பழமையான தீயைக் கையின்கண்
|