பக்கம் எண் :

464

1777.



பாவணவு சிந்தையவர் பத்தரொடு கூடி
நாவணவு மந்தணன் விருப்பிடம தென்பர்
பூவணவு சோலையிருண் மாலையெதிர் கூரத்
தேவண விழாவளர் திருப்புகலி யாமே.    3
1778.



மைதவழு மாமிடறன் மாநடம தாடி
கைவளையி னாளொடு கலந்தபதி யென்பர்
செய்பணி பெருத்தெழு முருத்திரர்கள் கூடித்
தெய்வம திணக்குறு திருப்புகலி யாமே.    4


ஏந்தி ஆடும் பரமனது பதி தாமரை மலரின் மணம் வீசப் பெறுவதும்
சோலைகள் சூழ்ந்ததும், தெளிந்த அலைகளை உடைய கடலில் தோணியாக
மிதந்து பொலிந்ததும் ஆகிய திருப்புகலியாகும்.

     கு-ரை: வண்டு இரை என்றால் புனலில் உள்ள மணம்பற்றியதாகும்.
வண்திரை என்றால் புனல் (நீர்) அலையின் வளம் உரைத்ததாகும்.
மதிச்சடை-பிறைசூடிய சடைமேல், மிலைத்த-சூடிய. புனல்-கங்கை நீர். எரி-தீ.
ஆடுபரமன்-ஆடும் கடவுள், தீயில் ஆடும், தீ ஏந்தி ஆடும் என்றிரண்டும்
ஆகும். பதியது-தலம், அது-பகுதிப் பொருள் விகுதி. புண்டரிகம்-தாமரை,
வாசம்-மணம், கடல் பொலி-கடலில் மிதந்து விளங்கிய காழி.

     3. பொ-ரை: இறைவன் புகழான பாடல்கள் பாடும் சிந்தையை
உடையவர்கள், பத்தர்களோடு கூடிப்பரவ, அவர்தம் நாவில் உறையும்
அந்தணனாக விளங்கும் பெருமானுக்கு விருப்பமான இடம், பூக்கள்
நிறைந்த சோலையில் இருளைத்தரும் மாலைப்போதுவர தெய்வத்
தொடர்பான விழாக்கள் நிகழும் திருப்புகலி எனக்கூறுவர்.

     கு-ரை: பா-பாடல். அணவு-கிட்டும், சிந்தையவர்-சித்தத்தையுடையவர்.
பத்தர்-அன்பர். நா அணவும்-நாக்கில் (புகழ் வடிவாகப்) பொருந்திய.
அந்தணன்-சிவன், அம்+தண்+அன்-அழகும் குளிர்ச்சியும் உடையவன்.
அந்தத்தை அண்ணுதலை, உடையவன் என்றாருமுளர். ‘அந்தத்தை
அணவுவார்’ என்றார் நாச்சினார்க்கினியர். கூர-மிக. தேவணவிழா-தெய்வ
வடிவான திருவிழா.

     4. பொ-ரை: கருமை நிறம் பொருந்திய மிடற்றினை உடைய
சிவபிரான் மகிழ்ச்சியால் சிறந்த நடனங்கள் ஆடி, கைகளில் வளையல்
அணிந்த உமையம்மையோடு கலந்துறையும் பதி, உருத்திரர்கள்