1781.
|
நல்குரவு
மின்பமும் நலங்களவை யாகி
வல்வினைகள் தீர்த்தருளு மைந்தனிட மென்பர்
பல்குமடி யார்கள்படி யாரவிசை பாடிச்
செல்வமறை யோருறை திருப்புகலி யாமே. 7 |
1782.
|
பரப்புறு
புகழ்ப்பெருமை யாளன்வரை தன்னால்
அரக்கனை யடர்த்தருளு மண்ணலிட மென்பர்
நெருக்குறு கடற்றிரைகண் முத்தமணி சிந்தச்
செருக்குறு பொழிற்பொலி திருப்புகலி யாமே. 8 |
1783.
|
கோடலொடு
கூன்மதி குலாயசடை தன்மேல்
ஆடரவம் வைத்தருளு மப்பனிரு வர்க்கும் |
7. பொ-ரை:
வறுமை இன்பவாழ்வு நலங்கள் ஆகியன வற்றைத்
தருபவராய்த் தம்மை வழிபடுவாரின் வலிய வினைகளைத் தீர்த்தருளும்
பெருவீரராய் விளங்கும் பெருமானாருடைய இடம், பெருகிய அடியார்கள்
நிலமிசை இசைபாடி வாழ்த்துவதும், செல்வம் நிரம்பிய மறையவர்கள்
நிறைந்துள்ளதுமான திருப்புகலியாகும்.
கு-ரை:
நல்குரவு-வறுமை, நல்க ஊர்தல் என்னுந் தொடர் நல்கூர்தல்
என்று மருவிற்று. பிறர் நல்க-வீடு வீடாக ஊர்ந்து சென்று வேண்டி நிற்றல்
பற்றிய காரணப்பெயர். இன்பம் -இன்பந்தரும் பொருள்.
மைந்தன்-வலிமையுடைய வீரன். படி - நிலம்.
8. பொ-ரை:
பரவியபுகழாளரும், கயிலைமலையால் இராவணனை
அடர்த்தருளிய தலைவருமான சிவபெருமானது இடம், நெருங்கிவரும் கடல்
அலைகள் முத்துக்களையும் மணிகளையும் சிந்துதலால் பெருமை பெற்ற
பொழில்கள் பொலியும் திருப்புகலிப் பதியாகும்.
கு-ரை:
பரப்பு-பரவுதல். பெருமை புகழ் ஆளன்-பெரும் புகழை
ஆள்பவன், புகழினது பெருமையை ஆள்பவன் எனக்
கிடந்தவாறுங்கொள்ளலாம், வரை-கயிலை மலை. திரை-அலை.
முத்தம்மணி-முத்துக்களையும், மணிகளையும்.
9. பொ-ரை:
காந்தள் மலர்களோடு வளைந்த பிறைமதி குலாவும்
சடையின்மேல் ஆடும் பாம்பினையும் வைத்தருளிய
|