பக்கம் எண் :

467

நேடவெரி யாகியிரு பாலுமடி பேணித்
தேடவுறை யுந்நகர் திருப்புகலி யாமே.          9
1784.



கற்றமண ருற்றுலவு தேரருரை செய்த
குற்றமொழி கொள்கைய திலாதபெரு மானூர்
பொற் றொடிமடந்தையரும் மைந்தர்புல னைந்துஞ்
செற்றவர் விருப்புறு திருப்புகலி யாமே.         10
1785.

செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன்மேல்
அந்தமுத லாகிநடு வாயபெரு மானைப்


தலைவரும், திரு மால், பிரமர் தேட எரியுருவமாய்த் தோன்றி அவர்கள்
கீழும், மேலும் அடி முடிகளைத் தேட நின்ற வருமான சிவபிரான் உறையும்
நகர் திருப் புகலியாகும்.

     கு-ரை: கோடல்-வெண்காந்தள், குலாய - குலவிய, நேட-தேட. பேணி
- விரும்பி.

     10. பொ-ரை: கல்வி கற்ற அமணர்களும், நூலறிவில் தேர்ந்துலவும்
புத்தர்களும் மெய்ப்பொருள் அறியாது கூறும் குற்றம் பொருந்திய
கொள்கைகளை ஏலாதவனது ஊர், பொன்னால் இயன்ற வளையல்களை
அணிந்த மகளிரும் மைந்தர்களும், ஐம்புலன்களையும் வென்றஞானியரும்
விரும்பும் திருப்புகலியாகும்.

     கு-ரை: கற்ற அமணர்-அவைதிகநூல்களைப்படித்த சமணர். குற்றம்
மொழி - குற்றங்களையுடையவார்த்தைகளை, கொள்கையது-கொள்ளுவது.
தொடி-வளையல்.

     மடந்தையர்-மகளிர். மைந்தர்-ஆடவர். புலன் ஐந்தும்
செற்றவர்-ஐம்புலத்தாசையையும் அகற்றிய ஞானியர்.

     11. பொ-ரை: செந்தமிழ் மொழிபரவி வளரும் திருப் புகலியில்
எழுந்தருளிய ஆதி, அந்தம், நடு எனப்படும் மூவகையாகவும் விளங்கும்
பெருமான்மீது, ஞானசம்பந்தன் உரைத்தருளிய இத்திருப்பதிகப் பாடல்களைக்
கொண்டு இசையோடு இயலும் வகையில் பாடிப் பரவுவார், வீடு பேற்றுக்கு
உரியவர் ஆவர்.