திருஞானசம்பந்தர்
பிள்ளைத்தமிழ்
சிறுபறைப்
பருவம்.
அருகரொடு
புத்தர்குல காலா
அழல்வலி தவிர்த்ததமிழ் வீரா
முருகுகமழ் கொச்சைவள நாடா
முடுகுதிறல் மிக்ககலி கோபா
பருவரையை யொத்ததிர டோளா
பரனையறி வித்தவிர லாளா
திருவிசை யளித்தகனி வாயா
சிறுபறை முழக்கியரு ளாயே.
இனவமணர்
பொய்ச்சொல்பெரு காமே
யெழுகலி தலத்தைநலி யாமே
மனுவழி பிழைக்கநட வாமே
வழுதியுடல் வெப்பிலுரு காமே
முனிவர்கள் தவத்தையொழி யாமே
முதன்மறை வழக்குமழி யாமே
தினகரனை யொத்தவொளி யானே
சிறுபறை முழக்கியரு ளாயே.
-ஸ்ரீமாசிலாமணி
தேசிகர்.
|