1821.
|
விளங்கிழை
மடந்தைமலை மங்கையொரு பாகத்
துளங்கொள விருத்திய வொருத்தனிட மென்பர்
வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி
நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய்நள் ளாறே. 3 |
1822.
|
கொக்கரவர்
கூன்மதியர் கோபர்திரு மேனிச்
செக்கரவர் சேருமிட மென்பர்தட மூழ்கிப்
புக்கரவர் விஞ்சையரும் விண்ணவரு நண்ணி
நக்கரவர் நாமநினை வெய்தியநள் ளாறே. 4 |
கு-ரை:
விண் இயல் பிறை பிளவு-வானூர் பிறைத்துண்டம்.
அறைப்புனல்-ஒலிநீர்கங்கை. புவி-பூமி. பண்ணிய-செய்த, பண்ணோடு
கூடிய எனலுமாம். நண்ணிய-விரும்பிய. வழிபாடு-அருள்வழி உயிர்க்குப்
படுதல்.
3. பொ-ரை:
விளங்கும் அணிகலன்களைப் பூண்டுள்ள
மலைமங்கையை மேனியின் ஒருபாகமாக இருத்தியுள்ள ஒப்பற்ற
வனாகிய சிவபிரான் இருக்கும் இடம், நளன் வந்து தங்கி நாள்தோறும்
தூபதீபங்களுடன் மலர்தூவி வழிபட்டுக் கலி நீங்கப்பெற்ற திருநள்ளாறு
ஆகும்.
கு-ரை:
இழை-ஆபரணம், முதல்நிலைத் தொழிலாகுபெயர்.
உளங்கொள -திருஉள்ளங்கொள்ள, விரும்ப. இருத்திய;பிறவினை,
ஒருத்தன்-தனிமுதல்வன், நளன் வழிபட்ட வரலாறு உணர்த்தப்
பட்டது. பூசிக்கும் முறையும் கூறப்பட்டது.
4. பொ-ரை:
திருக்குளத்தில் மூழ்கி நாகலோகத்தவரும்,
வித்யாதரர்களும், தேவர்களும், திகம்பரராய சிவபெருமான்
திருவைந்தெழுத்தை நினைந்து வழிபடும் திருநள்ளாறு, கொக்கிற்கு
அணிந்தவர். வளைந்த பிறைமதியைச் சூடியவர், கோபம் உடையவர்,
சிவந்த திருமேனியர் ஆகிய சிவபெருமான் சேரும் இடம், என்பர்.
கு-ரை:
கொக்கு-கொக்கிறகு. கொக்கிறகு சென்னி உடையான்
கண்டாய் (தி.6 பதி.36 பா.2) அரவர்-பாம்பணிந்தவர். கூன் மதியர்-
இளம் பிறைசூடி. கோபர்-கோபத்தை உடையவர். செக்கர் திருமேனியர்-
செவ்வானம் போலும் வண்ணத்தை உடைய திருமேனியர். அந்தி வண்ணர்.
புக்கு-புகுந்து அரவர்-
|