பக்கம் எண் :

490

1823.



நெஞ்சமிது கண்டுகொ ளுனக்கென நினைந்தார்
வஞ்சம தறுத்தருளு மற்றவனை வானோர்
அஞ்சமுது காகியவர் கைதொழ வெழுந்த
நஞ்சமுது செய்தவனி ருப்பிடநள் ளாறே.     5
1824.



பாலனடி பேணவவ னாருயிர் குறைக்குங்
காலனுடன் மாளமு னுதைத்தவர னூராம்
கோலமலர் நீர்க்குட மெடுத்துமறை யாளர்
நாலின்வழி நின்றுதொழில் பேணியநள் ளாறே. 6


நாகலோகத்தவர். விஞ்சையர்-வித்யாதரர். நக்கர்-நக்நர். திகம்பரர்.
நாமம்-திருப்பெயர். திருவைந் தெழுத்துமாம்.

     5. பொ-ரை: மனமே! இதுவே நீ உய்தற்குரிய நெறி எனத் தம்
மனத்துக்கு அறிவுறுத்தி நினைந்தவர்களின் குற்றங்களைப் போக்கி யருள்
பவரும், தேவர்கள் கடலிடைத் தோன்றிய நஞ்சைக் கண்டு அஞ்சி,
புறமுதுகிட்டு ஓடிவந்து, தன்னை வந்து கைதொழுத அளவில்,
அந்நஞ்சினை அமுதாக உண்டவரும் ஆகிய சிவபிரானது இருப்பிடம்
திருநள்ளாறு.

     கு-ரை: நினைந்தார்-நினைந்தவரது, வஞ்சம் அது - வஞ்சத்தை,
பொய்யை, பாற்கடலினின்றெழுந்த விஷத்தை அஞ்சிப் புறங்காட்டி ஓடிய
வானவர் கைதொழ, அந்நஞ்சை அமுதாகக் கொண்டு அவர்களைக்காத்த
சிவபெருமான்.

     6. பொ-ரை: மார்க்கண்டேயர் தம் திருவடிகளை வணங்கும்
வேளையில் அவர் உயிரைக் கவர்தற்கு வந்த காலன் உடனே மாளுமாறு
உதைத்தருளிய சிவபிரானது ஊர். மறையவர் அழகிய மலர்கள், நீர்
நிரம்பிய குடங்கள் ஆகியவற்றை எடுத்து வந்து நால்வேத நெறிநின்று
நீராட்டி, அருச்சித்து வழிபடும் திருநள்ளாறு ஆகும்.

     கு-ரை: பாலன் மார்க்கண்டேய முனிவர், பேண-விரும்பித் தொழ.
காலன் உடல்-எமனுடைய தேகம். உடன்மாள-உடனே அழிய என்றுமாம்.
அரன்-சிவபெருமான். கோலமலர்-அழகிய பூக்கள். நீர்க்குடம்-அபிஷேக
ஜலபாத்திரம். நாலின்வழி-நால்வேத நெறி. தொழில்-அருச்சனைத் தொழில்.