பக்கம் எண் :

49

           திருஞானசம்பந்த சுவாமிகள் திருவடி துணை

                  முதற் பதிப்பின் முகவுரை

“யாரேஎம் போல அருளுடையார்? இன்கமலத்
 தாரேயும் சென்னித் தமிழ்விரகன் - சீரேயும்
 கொச்சை வயன்றன் குரைகழற்கே மெச்சி
 அடிமைசெயப் பெற்றேன் அறிந்து”


                     -நம்பியாண்டார் நம்பிகள்.

     திருமுறை என்னும் பெயரின் முதலிலுள்ள திரு என்பது சிவத்தையும்
சிவனருளையும் அவ்வருளால் எய்தும் பேரின்பத்தையும் குறிக்கும்.
சிவமும் அருளும் பேரின்பமும் ஆன்மாக்கள் எய்தும் நெறிநிலையால்
வேறுபடினும் பொருளால் ஒன்றே ஆகும். “திருவொளிகாணியப்
பேதுறுகின்ற திசைமுகனும் திசை மேல் அளந்த கருவரை ஏந்திய மாலும்”
(தி-1.ப-39.பா-9) “திருவே என் செல்வமே தேனே வானோர் செழுஞ்சுடரே”
(தி-6.ப-47.பா-1) எனச் சிவமுதலையும் “சென்றடையாத திருவுடையான்”
(தி-1.ப-98.பா-1) எனச் சிவனருளையும் “சிவமே பெறும் திரு எய்திற்றிலேன்”
(திருவாசகம் 5.5.) எனச் சிவப் பேறாகிய பேரின்பத்தையும் ‘திரு’ என்னுஞ்
சொல்லால் குறித்தல் காண்க.

     முறை என்பது நூலைக்குறிக்கும். “இறைநிலம் எழுது முன் இளைய
பாலகன் முறை வரைவேன் என முயல்வது ஒக்கும்” என்னும் கந்தபுராணச்
செய்யுட்பகுதியால் அது நன்கு புலப்படும். படவே, திருமுறை என்பதற்குச்
சிவநூல், அருள்நூல், பேரின்பநூல் என்று பொருள் உரைத்தல் பொருந்தும்.

     சிவநெறி, அருள்நெறி, இன்பநெறி எனப்படும் எல்லாம் ஒன்றே ஆகித்
திருநெறி ஆதலின், அத்திருநெறியைக் காட்டும் திருஞானசம்பந்தமூர்த்தி
நாயனார் தமிழ், திருநெறிய தமிழ் என்னும்