பெயர் பெற்றது. திருநெறிய
தமிழ் வல்லவர் தொல் வினை தீர்தல் எளிது
என அப்பெருமானே அருளியதுணர்க.
திருநெறிய
தமிழ் மூன்று திருமுறையாகப் பகுக்கப் பெற்றுள்ளது.
அவற்றுள் முதற்றிருமுறை சென்றயாண்டின் குருபூசைத் திருநாள்
வெளியீடாகி விளங்குகின்றது. இரண்டாவது திருமுறையான இஃது,
இக்குருபூசைத் திருநாள் வெளியீடாயிற்று. இதுவும் குறிப்புரை
முதலியவற்றோடு திகழ்கின்றது.
இவ்வெளியீடு
தருமை ஆதீனம் இருபத்தைந்தாவது குருமகாசந்நிதானம்
ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணியதேசிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்
அவர்கள் திருவுள்ளத்தின் எழும் கருணை வடிவங்களுள் ஒன்றாகும்.
ஏனைய திருமுறைகளும் சித்தாந்த சாத்திரங்களும் முறையே, நன்முறையில்
வெளியிடுந் திருக்குறிப்பு அவர்களுக்கு உண்டு. ஸ்ரீ சொக்கலிங்கப்
பெருமான் திருவருள் துணையால் எல்லாம் இனிது நிறைவுறும். அவ்வருள்
அடியேன் சிற்றறிவில் நின்று தோற்றிய அளவில் இதற்குக் குறிப்புரை
எழுதியுள்ளேன். திருமுறைக் குறிப்பு எங்கே? அடியேன் சிற்றறிவு எங்கே?
இரண்டற்குமிடையே தருமைக் குருஞானசம்பந்தம் உண்டாகி இணைத்து
வைத்த ஆக்கமே இத்திருமுறை வெளியீடு. இக்குறிப்புரையில், அடியேன்
பல பிழைகள் செய்திருக்கலாம், அவற்றைத் திருத்தும் கடன் அறிஞர்க்கும்
அவ்வாறே திருந்தும் வேட்கை அடியேனுக்கும் உண்டு. இத்திருவருள்
வழியில் அடியேனை ஒரு பொருட்படுத்தி, எல்லாவகையிலும் இன்புறுத்தி
ஆட்கொண்டருளும் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்களுடைய
திருவடிமலர்களை முப்பொறித் தூய்மையுடன் மறவாது போற்றுங் கடப்பாடு
என்றும் உடையேன்.
நன்றியறிதலுரை:
இத்
திருமுறைப் பாடல்களையும் அவற்றிற்கு அடியேன் எழுதிய
குறிப்புரையையும் அச்சிடுங்கால், பிழைபார்த்தல் முதலிய பலதிறத்திலும்
துணையாயிருந்த வித்துவான்களும் தருமை ஆதீனப் பல்கலைக்கல்லூரித்
தமிழ் விரிவுரையாளர்களும் ஆகிய உயர் திருவாளர்கள் வி. சா. குருசாமி
தேசிகர், சொ. சிங்காரவேலனார், கே. எம். கிருஷ்ணமூர்த்தி,
(ஸ்ரீகுமரகுருபரன் உயர்நிலைப்பள்ளி. ஆடுதுறை) வை. திருஞானசம்பந்தம்,
நண்பர், திரு. ச. சீனிவாசப் பிள்ளை (தமிழாசிரியர், உயர்பள்ளி.
முத்தியாலுப்பேட்டை, சென்னை.) திரு. ரா. வேலாயுத ஓதுவாமூர்த்திகள்
(தேவார பாடசாலை
|