(ஆசிரியர்) முதலிய
எல்லோருக்கும் ஸ்ரீசொக்கலிங்கப் பெருமான்
திருவருளும் நம்குருவருளும் பெருகுக. தலங்களின் வரலாற்றுக்
குறிப்புக்களும் கல்வெட்டுக்களின் குறிப்புக்களும் எழுதியுதவிய பேரறிஞர்,
உயர்திருவாளர், சி. எம். இராமச்சந்திரஞ் செட்டியார் பி. ஏ., பி. எல்.,
அவர்களுக்கும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து ஆராய்ச்சிப் புலவருள்
ஒருவரான வித்துவான், உயர் திருவாளர். வை. சுந்தரேச வாண்டையார்
அவர்களுக்கும் என் உள்ளமார்ந்த நன்றி உரியது. இதற்கு ஓர் அணிந்துரை
எழுதியவரும், அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராயிருந்தவரும், இப்போது
தருமபுரத்தில் தமிழ்த் தொண்டு செய்பவரும், பெரும்புலவரும், சிவ
பூசாதுரந்தரரும் ஆகிய உயர்சைவத் திருவாளர். பண்டித. அ. கந்தசாமிப்
பிள்ளை அவர்களுக்கு என் நெஞ்சுவந்த நன்றி உரியது. குறிப்புரை மாட்சி
எழுதியதுகருதி, வித்துவான், திருவாளர், சொ. சிங்காரவேலனார்க்கு நலம்
பல நல்குக என்று ஸ்ரீ செந்தமிழ்ச் சொக்கேசனை மீண்டும்
வேண்டுகின்றேன். இத்திருமுறை வெளியீடு சிறக்கும் வழியில் பெரிதும்
உழைத்த ஞானசம்பந்தம் அச்சகத்திலுள்ள எல்லோர்க்கும் இறைவன்
திருவருளால் எல்லா நலங்களும் இனிதே விளைக.
வாழ்க
திருநெறிய தமிழ்.
சைவநெறி
தழைத்தோங்கச் சகலகலை களும்வளரத்
தருமம்
ஓங்கத்
தெய்வவழி பாடுமிகச் சிறந்தோங்கத் தமிழன்னை
செழிக்கத் தோன்றி
மெய்வளருந் தருமைமடத் திருபத்தைந் தாம் ஞான
வேந்த ராகிக்
கைவளருங் கொடைக்குருசுப் பிரமணிய தேசிகனார்
கழல்கள் போற்றி. |
தருமை
ஆதீனம் |
அடியார்க்கு
அடியன்,
|
23-5-54
|
முத்து.சு.
மாணிக்கவாசகன்
|
|