பக்கம் எண் :

492

1827.



உயர்ந்தவ னுருக்கொடு திரிந்துலக மெல்லாம்
பயந்தவ னினைப்பரிய பண்பனிட மென்பர்
வியந்தமரர் மெச்சமலர் மல்குபொழி லெங்கும்
நயந்தரும வேதவொலி யார்திருநள் ளாறே.   9
1828


.
சிந்தைதிரு கற்சமணர் தேரர்தவ மென்னும்
பந்தனை யறுத்தருள நின்றபர மன்னூர்
மந்தமுழ வந்தரு விழாவொலியும் வேதச்
சந்தம்விர விப்பொழின் முழங்கியநள் ளாறே. 10


     கு-ரை: வரை-மலை. அளி-வண்டு. கலவத்திரள்கள்-வாசனைக்
கலப்புடைய பொருள்களின் கூட்டம். கலவத் திரள்-ஆண் மயில் கூட்டம்
எனினும் ஆம். நடத்த-பெயரெச்சம்.

     9. பொ-ரை: உயர்ந்த உருவம் கொண்டு திரிந்த திருமால்,
உலகங்கள் அனைத்தையும் படைத்த பிரமன் ஆகியோர் நினைப்பதற்கும்
அரிய பண்புகளை உடைய சிவபிரானது இடம் தேவர்கள் வியந்து போற்ற
மலர்கள் நிறைந்த பொழில்கள் சூழ்ந்து விளங்குவதும் எல்லா இடங்களிலும்
அறநெறியின் வடிவான வேதங்களின் ஒலி நிறைந்துள்ளதுமான திருநள்ளாறு
என்பர்.

     கு-ரை: உயர்ந்தவன்-திருவிக்கிரமன், திருமால். பயந்தன்-பெற்றவன்.
பிரமன், அமரர் வியந்து மெச்ச. நயம் தருமம் - நயத்தை யுடைய தருமம்.
தருமவேதம்- ‘வேதத்தைவிட்ட அறமில்லை’ (திருமந்திரம்) நயம் தரும்
அவ்வேதவொலி எனலுமாம். ஆர்-நிறைந்த. நயந்தமரு என்றது பிழை.

     10. பொ-ரை: மனம் மாறுபட்ட சமணர் தேரர்கள் செய்யும் தவம்
என்னும் கட்டுப்பாடுகளை விலக்கி, தன்னை வழிபடும் அன்பர்க்கு
அருள்புரிய நின்ற பரமனது ஊர், மந்த இசையொடு முழவம் முழங்கும்
விழாக்களின் ஒலியும், வேதவொலியும் கலந்து நிறைந்து பொழிலில்
முழங்கும் திருநள்ளாறு ஆகும்.

     கு-ரை: திருகல்-மாறுபாடு. வேதச்சந்தம்-வேதத்தை ஓதும்
சந்தையொலி, பொழிலில் விரவி முழங்கிய நள்ளாறு.