ஆளுடையபிள்ளையார்
திருமும்மணிக்கோவை
அடுசினக்
கடகரி அதுபட உரித்த
படர்சடைக் கடவுள்தன் திருவரு ளதனாற் பிறந்தது
கழுமலம் என்னுங் கடிநக ரதுவே வளர்ந்தது
தேங்கமழ் வாவிச் சிலம்பரை யன்பெறு
பூங்குழல் மாதிடு போனகம் உண்டே; பெற்றது
குழகணைப்
பாடிக் கோலக்காப் புக்கு
அழகுடைச் செம்பொற் றாளம் அவையே; தீர்த்தது
தாதமர் மருகற் சடையனைப் பாடிப்
பேதுறு பெண்ணின் கணவனை விடமே; அடைத்தது
அரைசோ டிசையா அணிமறைக் காட்டுக்
குரைசேர்
குடுமிக் கொழுமணிக் கதவே; ஏறிற்று
அத்தியும் மாவுந் தவிர அரத்துறை
முத்தின் சிவிகை முன்னாட் பெற்றே; ஏறிற்று
அருமறை ஓத்தூர் ஆண்பனை யதனைப்
பெருநிறம் எய்தும் பெண்பனையாவே; கொண்டது
பூவிடு மதுவிற்
பொறிவண் டுழலும்
ஆவடு துறையிற் பொன்னா யிரமே; கண்டது
உறியொடு பீலி ஒருகையிற் கொள்ளும்
பறிதலைச் சமணைப் பல்கழு மிசையே; நீத்தது
அவிழ்ச் சுவை யேஅறிந் தரனடி பரவும்
தமிழ்ச்சுவை
அறியாத் தம்பங் களையே; நினைந்தது
அள்ளற் பழனக் கொள்ளம் பூதூர்
இக்கரை ஓடம் அக்கரைச் செலவே; மிக்கவர்
ஊனசம் பந்தம் அறுத்துயக் கொளவல
ஞானசம் பந்தன்இஞ் ஞாலத் திடையே.
-நம்பியாண்டார்
நம்பி.
|