பண்
- இந்தளம்
ப.தொ.எண்:
175 |
|
பதிக
எண்: 39 |
திருச்சிற்றம்பலம்
1884.
|
ஆரூர்தில்லை
யம்பலம் வல்லந்நல்லம்
வடகச்சியு மச்சிறு பாக்கநல்ல
கூரூர்குட வாயில் குடந்தைவெண்ணி
கடல்சூழ்கழிப் பாலைதென் கோடிபீடார்
நீ்ரூர்வய னின்றியூர் குன்றியூருங்
குருகாவையூர் நாரையூர் நீடுகானப்
பேரூர்நன் னீள்வய னெய்த்தானமும்
பிதற்றாய்பிறை சூடிதன் பேரிடமே. 1 |
1885.
|
அண்ணாமலை
யீங்கோயு மத்திமுத்தா
றகலாமுது குன்றங் கொடுங்குன்றமுங்
கண்ணார்கழுக் குன்றங் கயிலை கோணம்
பயில்கற்குடி காளத்தி வாட்போக்கியும் |
1.
பொ-ரை: பிறைசூடிய பெருமானின் பெருந்தலங்களாய ஆரூர்
தில்லையம்பலம் முதலானதலங்களின் பெயர்களைப் பலகாலும் சொல்லிக்
கொண்டிரு. உனக்குப் பெரும் பயன் விளையும்.
கு-ரை:
பீடு-பெருமை.
நீர் ஊர் வயல்-நீர் பரவிய கழனி.
பிதற்றாய்-இத்தலங்களின் திருநாமங்களை மீண்டும் மீண்டும் பிதற்றிக்
கொண்டிருப்பாய். பிதற்றுதலாலேயே பெரும்பயன் எய்துவாய் என்ற
படி. பிறைசூடி-சந்திரசேகரன். பேரிடம் -பெருந்தலங்கள். குடந்தை,
குடந்தைக்கீழ்க்கோட்டம், குடமூக்கு, குடந்தைக் காரோணம் நான்கும்
இப்போது கும்பகோணம் என்னும் நகரில் உள்ள வெவ்வேறு
சிவத்தலங்கள். இதில் குடவாயில் குடந்தை என்றும், பா.9-இல்
குடமூக்கென்றும் வெவ்வேறு கூறப்படுதல் காண்க. இப்பதிகத்துள்
அடங்கிய வைப்புத் தலங்கள் தனியாகக் காட்டப்படிருக்கின்றன.
2.
பொ-ரை: அண்ணாமலை
ஈங்கோய்மலை முதலான தலங்களை
விரும்பி இரவும் பகலும் எண்ணின் துன்பக்கடலை நீந்தற்குக்
|