பக்கம் எண் :

530

பண்ணார்மொழி மங்கையோர் பங்குடையான்
     பரங்குன்றம் பருப்பதம் பேணிநின்றே
எண்ணாயிர வும்பகலு
     மிடும்பைக்கட னீந்தலாங் காரணமே.   2
1886.







அட்டானமென் றோதிய நாலிரண்டு
     மழகன்னுறை காவனைத் துந்துறைகள்
எட்டாந்திரு மூர்த்தியின் காடொன்பதுங்
     குளமூன்றுங் களமஞ்சும் பாடிநான்கும்
மட்டார்குழ லாண்மலை மங்கைபங்கன்     
     மதிக்கும்மிட மாகிய பாழிமூன்றும்
சிட்டானவன் பாசூரென் றேவிரும்பா          
     யரும்பாவங்க ளாயின தேய்ந்தறவே.    3


காரணமாய் அமையும்.

     கு-ரை: முத்தாறு-விருத்தாசலத்தின் அருகே ஒடும் ஆற்றின் பெயர்.
வாட்போக்கி-ரத்நகிரி. வாள்-ஒளி. போக்கி-போகச் செய்வது. ஒளிவீசும்
அரதனகிரி என்க. ஈற்றடி கிடைத்திலது.

     3. பொ-ரை: இறைவனின் எட்டு வீரட்டங்களையும் அழகனாகிய
அப்பெருமானுறையும் காடு, துறை, நாடு, குளம், களம், பாடி, பாழி என
முடியும் தலங்களையும் அரிய பாவங்கள் தேய்ந்தொழிதற் பொருட்டு
விரும்புவாயாக.

     கு-ரை: அட்டானம் என்று ஓதிய நாலிரண்டும்-எட்டு
வீரட்டங்களும், அட்டானம்-அஷ்டஸ்தாநம் என்பதன் திரிபு. கா, துறை,
காடு, குளம், களம், பாடி, பாழி என முடியும் தலங்களையும் அவற்றுள்
கா அல்லாதவற்றின் தொகையையும் குறித்தமை காண்க. சிட்டன்-சிஷ்டன்.
காடொன்பது- திருமறைக்காடு, தலைச்சங்காடு, தலையாலங்காடு, சாய்க்காடு,
கொள்ளிக்காடு, ஆலங்காடு, பனங்காடு, வெண்காடு, வேற்காடு,
கோட்டுக்காடு, நிறைக்காடு, மிறைக்காடு, இறைக்காடு என்பவும் உள.
(சுந்தரர் ஊர்த்தொகை. 3) குளமூன்றும் களம் அஞ்சும்-திருக்குளம்,
இடைக்குளம், பாற்குளம், வளைகுளம், கடிக்குளம், தஞ்சைத் தளிக்குளம்
என்பவற்றுள் எம்மூன்றோ? ‘வளைகுளமும் தளிக்குளமும் நல்லிடைக்குளமும்
திருக்குளத்தோடு அஞ்