பண்ணொன்ற
இசைபாடும் அடியார்கள் |
பண்ணின்
பயனாம் நல்லிசை |
என்றும் சம்பந்தமூர்த்தி
சுவாமிகளே கூறியருளினார்கள்.
இன்னும்
திருமறைக்காட்டுப் பதிகத்தில்,
காழிந்நகரான்
கலை ஞானசம்பந்தன்
வாழிம்மறைக் காடனை வாய்ந்தறிவித்த
ஏழின்னிசைமாலை யீரைந் திவைவல்லார்
வாழிவ்வுலகோர் தொழ வானடைவாரே |
என்றும் கூறியருளினார்கள்.
அப்பரடிகளோ
தம் திருத்தாண்டகத்தில்,
சலம்பூவொடு
தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந் தறியேன் |
என்று அருளினார்கள்,
இவற்றால்
நம் திருமுறை ஆசிரியர்கள் திருமுறைகளை இசை
வடிவிலே-பண் உருவிலே அமைத்துப் பாடிவந்த பண்பாளர்கள் என்பது
இனிது விளங்கும்.
ஒவ்வொரு
நாட்டையே சைவத்திருநாடாக்கிய சான்றோர்கள்.
சம்பந்தமூர்த்திசுவாமிகள் பாண்டிநாட்டைத் தெய்வ ஒளியாக்கி
அருளினார்கள். அப்பரடிகள் பல்லவ நாட்டைப் பண்பாடுபெறச்
செய்தருளினார்கள். இவ்வாறு நாட்டையும், மக்களையும் மொழியாலும்
இசையாலும் பிணித்து அதன்மூலம் தெய்வச் சைவத்தை வளர்த்துப்
பாதுகாத்தார்கள் திருமுறை ஆசிரியர்கள்.
உரை
உண்டா?
இத்தகைய
தமிழர் தெய்வக் கருவூலங்களாகிய திருமுறைகளுக்கு
இதுகாறும் உரைகள் தோன்றவில்லை. திருமுறைகளுக்கு
|