உரை எழுதக்கூடாது;
உரை காணவும் கூடாது என்ற ஒரு வரம்பு நாட்டில்
இருந்துவந்தது. என்ன வியப்பு! படித்தவரேயன்றிப் பாமரரும் திருமுறைகளை
உணர்ந்துகொள்ளுதல் அரிதாயிற்று. சமுதாயத்தில் கற்றவர் கூட்டமே
திருமுறை உணர்ந்து ஓதியது; மற்றவர் அறிந்திலர். இந்த நிலையை மாற்றத்
திருவுள்ளம் கொண்டார்கள். தருமையிலே இன்று தவப்பேரரசு நடாத்தும்
இருபத்தைந்தாவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக
ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள். எங்களையெல்லாம்
ஆட்கொண்ட ஞான வள்ளல். உலகம் உய்யவந்த ஒப்பற்ற திருநெறிய
தெய்வத் தமி்ழை உலகம் உணர வேண்டாமா? அவ்வாறு உணர உரை
ஒன்று தேவையல்லவா? ஒவ்வொரு திருமுறைக்கும் குறிப்புரை எழுதி
வெளியிடுதலால் உலகம் பயன்படும் அல்லவா? என்று சிந்தித்தார்கள்.
செந்தமிழ்ச்சொக்கர் திருவருள் சிந்தனைக்குள் நின்று செந்தேனாகத்
தித்தித்தது.
அருளணை
பிறந்தது:
கற்றாரேயன்றி
மற்றாரும், பண்டிதரேயன்றிப் பாமரரும், உணர்ந்து
வாழத் தொடங்கட்டும்; திருமுறைகள் மனிதவாழ்வின் நெறிமுறைகளல்லவா?
மனிதர்காள் இங்கேவம்மின்! ஒன்று சொல்லுகேன் என்று மனித
சமுதாயத்துக்கு அறைகூவல் விடுத்து அரன் திருவடி மறவாதீர்கள் என்று
வற்புறுத்தும் வாய்மை விளக்கல்லவா? அதற்கு உரைப்பணி மிகமிக
இன்றியமையாதது அப்பணியை நம் ஆதீனப் புலவர்கள் செய்து முடித்தலே
செந்தமிழ்ச்சொக்கர் திருவுள்ளம் இப்படி அருளாணை பிறந்தது எங்கள்
குருமகாசந்நிதானத்திலிருந்து. 1953ஆம் ஆண்டு குருபூசைத்திருநாள்
வெளியீடாக முதல் திருமுறை ஆதீனப் பல்கலைக் கல்லூரியில்
துணைத்தலைவராயிருந்த வித்துவான், திருவாளர். ச. தண்டபாணி தேசிகர்
அவர்களால் குறிப்புரை எழுதப்பெற்று வெளிவந்தது. அடுத்து இவ்வாண்டுக்
குருபூசைத் திருநாள் வெளியீடாக இரண்டாம் திருமுறைக் குறிப்புரை
வெளிவருகிறது.
இரண்டாம்
திருமுறை:
இரண்டாம்
திருமுறை திருஞானசம்பந்தசுவாமிகள் திருவாய் மலர்ந்த
தெய்வத் தமிழ்த் திருமறையில் நடுவணதாக நின்று நனி பேரின்பம் பயப்பது.
நூற்றிருபத்திரண்டு திருப்பதிகங்களை உடையது. ஆதியும் அந்தமும்
பீடுடைய பிரமாபுர மாகவே பிறங்குவது, திருப்பூந்தராய் என்ற தெய்வப்
பெயரோடு தோணிபுரத் தண்ணலைத் தோத்திரித்துத் திருப்புகலி என்ற
தீந்தமிழ்ப் பெயரோடு 84
|