பிரமாபுரமேவிய பெருமானின்
பெருமைகளைப் பேசிமுடிப்பது. திருவருட்
பெருக்கால் உலகெலாம் என்று தொடங்கி உலகெலாம் என்று நிறைந்த
தொண்டர்சீர் புராணத்தை எண்ணச்செய்வது இத்திருமுறை.
திருவருள்
வளம்:
எச்செயலும் ஈசன்
துணையின்றி முடியாது. ஈண்டும் அவ்வாறே.
திருவருள் வளமாக இருந்தது. அதனை எவ்வாறு உரைத்தல் இயலும்?
செந்தமிழ்ச்சொக்கர் மணிவாசகரோடு மிகமிகத் தொடர்புகொண்டவர்.
மணிவாசகருக்காகப் பிட்டு உண்டார்; மண் சுமந்தார்; அடிவடுச் சுமந்தார்.
அவ்வாறு தொடர்புகொண்ட
செந்தமிழ்ச்சொக்கர் இன்றும் இந்த
மணிவாசகரோடு தொடர்புகொண்டு இலங்குகிறார். இரண்டாந் திருமுறைக்கு
எழுதப்பட்ட இனிய - நயம் செறிந்த - அழகிய - வளமிக்க குறிப்புரை
மாலையைச் சூடிக்கொண்டு அருள்மழை பொழிகின்றார்; அம்மட்டோ?
குருஞானசம்பந்தரே அருளாணையிட மணிவாசகர் குறிப்புரை மாலை
தொகுக்கிறார். என்னே திருவருள் வளம்! குருஞானசம்பந்தரும்,
மணிவாசகரும் இரண்டுக்கும் மேலாகச் செந்தமிழ்ச் சொக்கர்சுப்பிரமணியர்
திருவருளுமாக நான்கும் சேர்ந்து முழுமதிபோல நிறைவுற்று விளங்குகிறது
இக்குறிப்புரை.
குறிப்புரை
ஆசிரியர்:
இரண்டாம் திருமுறைக்குக்
குறிப்புரை எழுதுதலை மேற்கொண்டவர்கள்
நல்ல அறிஞர். சைவசித்தாந்த சாத்திரங்களில் நுண்ணிய புலமைமிக்கோர்.
திருமுறைகளில் ஆழ்ந்த அநுபவம் உள்ளோர். சிவபூஜாதுரந்தரர். தருமை
ஆதீனப் பல்கலைக் கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியராக விளங்குகின்ற
புலவர். திருவாளர். முத்து சு. மாணிக்கவாசக முதலியார் அவர்கள்.
திருமுறையாசிரியப் பெருந்தகையார்களாகிய சமயாசாரியர்களிடத்தி்ல் மிக்க
ஈடுபாடும், இடையறாப் பேரன்பும் உள்ளவர். இன்னோரை உரையெழுதுமாறு
பணித்த எங்கள் குருமகா சந்நிதானம் அவர்களின் குலவு
பெருங்கருணைக்குக் குவலயமும் ஈடாமோ?
அம்மட்டுமோ!
பழைய இலக்கண இலக்கியங்களை ஆராய்ந்து
எம்போன்றோர் மன இருள்போக்கி மாண்பொருள் முழுவதும் முனிவற
அருளிய நல்லாசிரியர்; சைவசித்தாந்த ரத்நாகர
|