பதிக
வரலாறு:
திருவலம்புரத்தை
வழிபட்ட திருஞானசம்பந்தப் பெருமானார், நீர்
வளம் நிறைந்த சீர்வளர் சாய்க்காட்டைத் தொழுதற்கு நினைந்து சென்று,
திருப்பல்லவனீச்சரத்தைச் சொல்லழகும் பொருளழகும் பேரின் பூற்றும்
அமையப்பாடிப் பரவி, பொன்னி சூழ் புகாரில் நீடிய புனிதரது
திருசாய்க்காட்டை, திருத்தொண்டர் பலரும் எதிர்கொள்ளச் சென்று,
வானளாவி உயர்ந்த திருவாயிலுள் வலங்கொண்டு, புகுந்து பணிந்து
போற்றியது இத் திருப்பதிகம்.
பண்:
சீகாமரம்
ப.தொ.எண்:
177 |
|
பதிக
எண்: 41 |
திருச்சிற்றம்பலம்
1906.
|
மண்புகார்
வான்புகுவர்
மனமிளையார் பசியாலுங்
கண்புகார் பிணியறியார்
கற்றாருங் கேட்டாரும்
விண்புகா ரெனவேண்டா
வெண்மாட நெடுவீதித்
தண்புகார்ச் சாய்க்காட்டெந்
தலைவன்றாள் சார்ந்தாரே. 1 |
1. பொ-ரை:
வெண்மாடங்களைக்
கொண்ட நீண்ட வீதியினை
உடைய தண்மையான புகாரில் விளங்கும் சாய்க்காட்டுள் மேவிய எம்
தலைவன் தாளைச்சார்ந்து அவன் புகழைக்கற்றவரும் கேட்டவரும் நில
உலகில் பிறவார், பேரின்ப உலகம் பெறுவர். மனச்சோர்வாலும் பசியாலும்
இடுக்கண் அடையார். நோய் உறார்.
கு-ரை:மண்
புகார்-பிறவார் என்றவாறு. வான்புகுவர்-பேரின்பம்
அடைவார் என்றவாறு. மனம் இளையார் முதலிய மூன்றும் இம்மை நலம்
குறித்தவை. கண்புகார்-இடுக்கண் உறார் (இடுங்குகண்) கற்றவரும்
கேட்டவரும் என்பது இடைநிலை விளக்கா நின்று
|