1907.
|
போய்க்காடே
மறைந்துறைதல்
புரிந்தானும் பூம்புகார்ச்
சாய்க்காடே பதியாக
வுடையானும் விடையானும்
வாய்க்காடு முதுமரமே
யிடமாக வந்தடைந்த
பேய்க்காடல் புரிந்தானும்
பெரியோர்கள் பெருமானே. 2 |
1908.
|
நீநாளு
நன்னெஞ்சே
நினைகண்டா யாரறிவார்
சாநாளும் வாழ்நாளுஞ்
சாய்க்காட்டெம் பெருமாற்கே. |
முன்னும் பின்னும்
உள்ள பயனிலைகட்கு எழுவாயாயின. விண்ணிற்
புகமாட்டார் எனல் வேண்டா, அதனினும் உயர்ந்த சிவலோகம் சேர்ந்து,
திருவடியைச் சார்ந்தாரே. வீதிக்கு வெண்மாடம் விசேடம். புகார்-
காவிரிப்பூம் பட்டினம். (பா.4)
2.
பொ-ரை:
இடுகாட்டுள் மறைந்து உறைதலை விரும்புபவனும்,
பூம்புகாரை அடுத்துள்ள சாய்க்காட்டைப் பதியாக உடையவனும்,
விடையூர்தியனும், காட்டில் உள்ள முதிய ஆலமரத்தை இடமாகக்கொண்ட
பேயின் பாடலுக்கு ஏற்ப ஆடுபவனும் ஆகிய சிவபிரான் பெரியோர்களின்
தலைவன் ஆவான்.
கு-ரை:
காடே போய் மறைந்து உறைதல் புரிந்தான்-காட்டிலே
சென்று ஒளிந்து வாழ்தலை விரும்பினவன். புகாரும் சாய்க்காடும்
நெருங்கியிருத்தலால். புகார்ச்சாய்க்காடு என்றார். பதி-வாழுமிடம்.
வாய்க்காடு, காட்டுவாய் என மாற்றிக் காட்டின்கண் என்று உரைத்துக்
கொள்க. வாய்-இடம், (அகன்ற) காடு என்றுமாம். முது மரம்-ஆலமரம்.
பேய்க்கு ஆடல்-பேயின் பாடலுக்குத்தக்க ஆடுதலை. பேயடைந்த
காடிடமாப் பேணுவது பேயாயினபாடப் பெரு நடமாடிய பெருமான்
(தி.1 பதி.48 பா.5. தி.1 பதி.15 பா.3). புரிந்தானும் முதலிய நான்கும்
கூட்டிப்பெருமானே என்பதொடு முடிக்க.
3.
பொ-ரை:
நல்லநெஞ்சமே! நீ நாள்தோறும் அவனை
நினைவாயாக. சாகும் நாளையும் உயிர்வாழும் நாளையும் யார் அறிவார்கள்.
ஆதலின் சாய்க்காட்டை அடைந்து அங்குள்ள எம்பெருமானுக்கு
|