|
பூநாளுந்
தலைசுமப்பப்
புகழ்நாமஞ் செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப்
பெறலாமே நல்வினையே. 3 |
1909.
|
கட்டலர்த்த
மலர்தூவிக்
கைதொழுமின் பொன்னியன்ற
தட்டலர்த்த பூஞ்செருந்தி
கோங்கமருந் தாழ்பொழில்வாய்
மொட்டலர்த்த தடந்தாழை
முருகுயிர்க்குங் காவிரிப்பூம்
பட்டினத்துச் சாய்க்காட்டெம்
பரமேட்டி பாதமே. 4 |
நாளும் பூக்களைத் தலையில்
சுமந்து சென்று அருச்சித்தும் செவிகளால்
அவன் புகழ் மொழிகளைக்கேட்டும், நாள்தோறும் நாவினால் அவன்
திருப்பெயரை நவின்றேத்தியும் செயற்படின் நல்வினைப்பயன் பெறலாம்.
கு-ரை:
நல்நெஞ்சே! நீ நாளும் நினை. சாம்நாளும் வாழ்நாளும்
அறிவார் ஆர்? எம்பெருமானுக்கே நாளும் தலை பூக்களைச் சுமக்கவும்
செவிகள் அவன் திருப்புகழ்களையும் அவற்றைக் குறிக்கும். திருப்
பெயர்களையும் கேட்கவும், நாக்கு அவற்றை நாளும் நவின்று ஏத்தவும்
(செய்யும்) நல் வினையைப் பெறலாம், நல் வினையாற் பெறலாம்
என்றுமாம். நவின்று-நாவால் சொல்லி அடிப்பட்டு, மறைநவில் அந்
தணர் நுவலவும் படுமே. (புறம், கடவுள் வாழ்த்து) இறப்பும் இருப்பும்
அறியாமையால். இருக்கும்போதே முன்னை நல்வினைப் பயனாக
நாடோறும் திருவடி நினைவு, பூச்சுமை, புகழ்க் கேள்வி, நாநவிற்சி
ஆகிய சிவ புண்ணியங்களைத் தேடிக்கொள்க.
4.
பொ-ரை : பொன்தட்டுப் போல மலர்ந்த செருந்தி, கோங்கு
முதலிய மரங்கள் பொருந்திய தாழ்ந்த பொழிலிடத்துத் தாழைமலர்கள்
மொட்டுக்களை விரித்து மணம் பரப்பும் காவிரிப்பூம்பட்டினத்துச்
சாய்க்காட்டுப் பரமேட்டியின் பாதங்களை வண்டுகளால் கட்டவிழ்க்கப்பட்ட
மலர்களைத்தூவிக் கைகூப்பி வணங்குமின்.
கு-ரை:
கட்டு - (கள் + து) கள்ளுடைய அரும்புகளின் உறுதி
|