பக்கம் எண் :

546

1910.







கோங்கன்ன குவிமுலையாள்
     கொழும்பணைத்தோட் கொடியிடையைப்
பாங்கென்ன வைத்துகந்தான்
     படர்சடைமேற் பான்மதியந்
தாங்கினான் பூம்புகார்ச்
     சாய்க்காட்டான் தாள்நிழற்கீழ்
ஓங்கினா ரோங்கினா
     ரெனவுரைக்கு முலகமே.              5
1911.



சாந்தாக நீறணிந்தான்
     சாய்க்காட்டான் காமனைமுன்
தீந்தாக மெரிகொளுவச்
     செற்றுகந்தான் றிருமுடிமேல்


நிலை, பிணிப்புமாம். அலர்ந்த-அலரச்செய்த, பிறவினை. சிவபூஜை செய்க
என்று ஏவியருளியவாறு, பொன் இயன்ற தட்டு அலர்த்தபூ-பொன்னால்
ஆகிய தட்டுப்போலும் பூத்த பூ, கோங்கு அமரும் பொழில். மொட்டு-
அரும்புகள். முருகு-மணம், உயிர்க்கும் - (வெளி) விடும். பரமேட்டி -
தனக்கு மேலில்லாத உயர்ந்த இடத்தினையுடையவன். பாதமே
கைதொழுமின் என்று விற்பூட்டாக் கொள்க.

     5. பொ-ரை: கோங்கரும்பு போன்ற தனங்களையும், செழுமையான
மூங்கில் போன்ற தோள்களையும் கொடிபோன்ற இடையினையும் உடைய
உமையம்மையைத் தன் பாகமாக வைத்து மகிழ்பவனும், தன் திருமுடிமேல்
பால்போன்ற வெள்ளிய மதியைச்சூடியவனுமான பூம்புகார்ச் சாய்க்காட்டு
இறைவனின் திருவடி நீழலில் ஓங்கி நின்றவரே ஓங்கினார் எனப்படுவார்.

     கு-ரை: கோங்கு- கோங்கினரும்பு. அன்ன-ஒத்த, பணை-மூங்கில்,
பாங்கு-(பால்+கு) இடப்பால், பால் மதியம் - பால் போலும் வெண்டிங்கள்.
தாள் நிழல் கீழ் ஓங்கினார்-‘ஓங்குணர்வின் உள் அடங்கி உள்ளத்துள்
இன்பு ஒடுங்கத்தூங்குவர்’ (திருவருட்பயன்.91) திருவடிக்கீழ் ஓங்கினவரே
ஓங்கினவர், மற்று எங்கு ஓங்கினும் அஃது ஓங்குதலாகாது; தாழ்தலேயாகும்.
என உலகம் உரைக்கும் என்று மாற்றுக.

     6. பொ-ரை : சந்தனம் போலத்திருநீற்றை உடல் முழுவதும்
அணிந்தவன். சாய்க்காட்டில் உறைபவன். காமனின் உடல் தீயுமாறு