பக்கம் எண் :

547

  ஓய்ந்தார மதிசூடி
     யொளிதிகழு மலைமகடோள்
தோய்ந்தாகம் பாகமா
     வுடையானும் விடையானே.           6
1912.







மங்குல்தோய் மணிமாட
     மதிதவழு நெடுவீதிச்
சங்கெலாங் கரைபொருது
     திரைபுலம்புஞ் சாய்க்காட்டான்
கொங்குலா வரிவண்டின்
     னிசைபாடு மலர்கொன்றைத்
தொங்கலா னடியார்க்குச்
     சுவர்க்கங்கள் பொருளலவே.         7


எரிகொளுவச் செய்தவன். திருமுடியில் நுணுகிய மதியைச் சூடியவன்.
ஒளிதிகழும் மலைமகள் தோளைத் தோய்ந்து அவளைப் பாகமாகக்
கொண்டவன். விடையூர்தியன்.

     கு-ரை: சாந்து-சந்தனம். சாந்தாக நீறணிந்தான்-‘சாந்தம் ஈது என்று
எம்பெருமான் அணிந்தநீறு’ (தி.1 பதி.52 பா.7.) தீந்து-தீய்ந்து, எரிந்து.
ஆகம்-உடம்பு. ஆகத்தைத் தீய்ந்து எரிகொளுவச் செற்று உகந்தான் என்க.
கொள்ள-தன்வினை கொளுவ:-பிறவினை. கொளுத்த; பொருத்த. ஓய்ந்து
ஆர-நுணுகிப்பொருந்த. ஓய்தலுற்றுத் தங்க எனலுமாம். மலை மகள் (உமா
தேவியார்). தோய்ந்து-தழுவி.

     7. பொ-ரை: மேகங்களைத் தோயுமாறு உயர்ந்து விளங்கும்
அழகியமாட வீடுகளின் வெண்ணிற ஒளியை உடைய வீதிகளைக்
கொண்டதும், சங்குகளைக் கரையில் கொண்டு வந்து சேர்க்கும்
அலைகளின் ஆரவாரம் கேட்பதுமாய சாய்க்காட்டு இறைவன், தேன்
உண்ணவந்த வரிவண்டுகள் இன்னிசைபாடும் மலர் மாலைகளை
அணிந்தவன். அப்பெருமானை அடைந்த அடியவர்க்குச் சுவர்க்கங்கள்
பொருள் எனத்தோன்றா.

     கு-ரை: மங்குல்-மேகம். புலம்பும்-ஒலிக்கும். கொங்கு-மணம். தேன்
உலாமலர். கொங்கிற்கு உலா வண்டு எனலுமாம். தொங்கலான்-மாலையினன்.
சுவர்க்கங்கள்-தேவலோகங்கள்.