பக்கம் எண் :

548

1913.







தொடலரிய தொருகணையாற்
     புரமூன்று மெரியுண்ணப்
படவரவத் தெழிலாரம்
     பூண்டான்பண் டரக்கனையுந்
தடவரையாற் றடவரைத்தோ
     ளூன்றினான் சாய்க்காட்டை
இடவகையா வடைவோமென்
     றெண்ணுவார்க் கிடரிலையே.         8
1914.







வையநீ ரேற்றானு
     மலருறையு நான்முகனும்
ஐயன்மா ரிருவர்க்கு
     மளப்பரிதா லவன்பெருமை
தையலார் பாட்டோவாச்
     சாய்க்காட்டெம் பெருமானைத்
தெய்வமாப் பேணாதார்
     தெளிவுடைமை தேறோமே.           9


வானோர்க்கும் உயர்ந்த உலகத்தை அடையத்தக்க சிவனடியார்க்கு
வானோருலகம் பொருளாகா.

     8. பொ-ரை: தொடற்கரிய வெம்மையையுடைய ஒருகணையால்
முப்புரங்களையும் எரியுண்ணச் செய்தவனும் படப்பாம்பை அணிகலனாகப்
பூண்டவனும், முற்காலத்தே இராவணனைக் கயிலை மலையால் பெரிய
தோள்களை ஊன்றி நெரித்தவனும் ஆகிய சிவபிரானது சாய்க்காட்டைச்
சிறந்த ஒரு தலம் எனக் கருதி அடைவோர்க்கு இடர் இல்லை.

     கு-ரை: தொடல் - (தொடு+அல்) தொடுத்தல், தொடுதல் என்னும்
இரு பொருளும் அமையும்; தீக்கணையாதலின். படஅரவத்து எழில்
ஆரம்-படத்தையுடைய அழகிய மாலை. தடவரை. . . ஊன்றினான்,
இராவணனது பெரிய மலைபோலும் தோள்களை விசாலமான கயிலை
மலையால் அழுத்திய பரமசிவன். இடர்-பிறவித் துன்பம் முதலிய எல்லாம்.

     9. பா-ரை: இவ்வுலகை நீர்வார்த்துத்தர ஏற்ற திருமாலும், தாமரை
மலரில் உறையும் நான்முகனும் ஆகிய இருதலைமைத்